அன்பே சிவம்? ஓஷோ
அன்பே சிவம்?
ஓஷோ
❄ஓ சிவனே! உண்மையில் நீ என்ன?❄
🌸"தேவி, உறுதியாக...
"உருவத்தின் மீதான அன்பில்"
விழுந்திருக்க வேண்டும்...
🌸விஷயங்கள் அந்தவழியில்தான் ஆரம்பிக்கும்...
🌸அவள், சிவனை ஒரு ஆணாக நேசித்திருக்க வேண்டும்...
ஆனால், இப்போது...
அன்பு வளர்ந்த நிலையில்...
அன்பு மலர்ந்த நிலையில்...
இந்த ஆண் மறைந்துவிட்டான்.
🌸அவன் உருவமற்றவனாகிவிட்டான்...
இப்போது, அவனை எங்கேயும்
கண்டுபிடிக்க முடியாது...
"ஓ சிவனே! நீ உண்மையில் என்ன?"
🌸இந்தக் கேள்வி...
அன்பின் தீவிரமான தருணத்தில் கேட்கப்பட்ட கேள்வி...
கேள்விகள் எழும்போது...
எப்படிப்பட்ட மனநிலையிலிருந்து கேட்கப்பட்டவை என்பதைப் பொருத்து...
அவை வேறுபடுகின்றன...
🌸ஆகவே சூழ்நிலையை...
அந்தக் கேள்வி பிறந்த சமயத்தை...
உன் உள்ளத்தில் உருவாக்கிக்கொள்...
🌸தேவி,
சிவனை இழந்த தவிப்பில் இருந்திருக்க வேண்டும்...
"சிவன் அரூபமாகிவிட்டார்..."
🌸"அன்பு சிகரத்தை எட்டும்போது...
அன்பிற்கினியவர் மறைந்து போகிறார்..."
ஏன் இப்படி நடக்கிறது?
🌸ஏனென்றால்,
உண்மையாக எல்லோருமே
உருவமற்றவர்கள்தான்...
🌸நீ ஒரு உடம்பல்ல...
நீ உடம்பாக நகர்கிறாய்...
நீ உடம்பாக வாழ்கிறாய்...
ஆனால் நீ ஒரு உடம்பல்ல.
🌸ஒருவனை வெளியிலிருந்து பார்க்கும்பொழுது...
அவன் உடம்பு...
அன்பு உடம்பைத் தாண்டி உள்ளே ஊடுருவுகிறது...
🌸பிறகு அவரை நாம் வெளியிலிருந்து பார்ப்பதில்லை...
"அன்பு ஒருவரை...
அவர் எப்படி தன்னை தனக்குள் இருந்து பார்ப்பாரோ...
அதைப் போலப் பார்க்கிறது..."
அப்போது உருவம் மறைந்து போகிறது...
🌸ஒரு ஜென் துறவி...
ரின்சாய் ஞானமடைந்தார்...
உடனே அவர் கேட்ட முதல் கேள்வி,
"என் உடம்பு எங்கே?
என் உடம்பு எங்கே போயிற்று?"
என்று அவர் தேட ஆரம்பித்தார்...
🌸அவருடைய சிஷ்யர்களைக்
கூப்பிட்டுச் சொன்னார்...
"போய் என்னுடைய உடம்பு எங்கே என்று கண்டுபிடியுங்கள்..."
நான் என் உடம்பை இழந்துவிட்டேன்...
🌸அவர் அரூபத்தினுள் நுழைந்துவிட்டார்...
"நீயும் ஒரு அரூப இருப்புதான்"
🌸பிரதிபலிக்கும் கண்ணாடி
மூலமே...
உன் முகம் உனக்குத் தெரியும்.
🌸உன் கண்களை மூடி யோசி.
தியானம் செய்:
உனக்கு முகமே இல்லை...
பிரதிபலிக்கும் கண்ணாடிகளே...
உனக்கு முகத்தைக் கொடுக்கிறது...
🌸பிரதிபலிப்பு இல்லாத உலகத்தை கற்பனை செய்துபார்...
🌸நீ தனியாக ஒரு தனித்தீவில் இருக்கிறாய்...
மற்றவர்களின் கண்கள் காட்டும் பிரதிபலிப்பும் இல்லை...
🌸அப்போது உனக்கு முகம்
இருக்குமா?
உனக்கு சுத்தமாக முகமே இருக்காது...
🌸நமக்கு நம்மைப் பற்றி...
அடுத்தவர் மூலமாகவே தெரியும்...
அடுத்தவர்களுக்கு நம் வெளி உருவம் மட்டுமே தெரியும்...
🌸இதனால்தான்...
நாம் இந்த வெளித் தோற்றத்துடன்...
நம்மைச் சேர்த்து வைத்துப் பார்க்கிறோம்...
🌸தேவி சிவாவிடம் கேட்கிறாள்...
"ஓ சிவனே! நீ உண்மையில் என்ன?"
நீ யார்?
சிவனின் உருவம் மறைந்துவிட்டது...
எனவே தேவியிடம் இந்த கேள்வி.
🌸"அன்பில் நீ அடுத்தவரிடம்...
அவராகவே புகுகின்றாய்..."
நீ நீயாக புகுவதில்லை...
நீ ஒன்றிவிடுகிறாய்...
🌻"முதல் முறையாக...
நீ அடிமுடியில்லாத ஆழத்தை,
அறிகிறாய் ---
ஒரு அரூப இருப்பை.
🌻இதனால்தான் தொடரும்... பல நூற்றாண்டுகள், நூற்றாண்டுகளாக...
நாம் சிவனுக்கு, எந்த சித்திர வடிவத்தையும் கொடுக்கவில்லை...
🌻நாம் "சிவலிங்கத்தை மட்டுமே செய்து வருகிறோம்.
இது ஒரு குறியீடு மட்டுமே."
சிவலிங்கம் ஒரு அரூப வடிவமே...
🌻நீ ஒருவரை நேசிக்கும்போது...
நீ அன்பால் ஒருவருக்குள் புகும்பொழுது...
அவர் ஒரு வெறும் பிரகாசமான இருப்பாக மாறிவிடுகிறார்...
🌻சிவலிங்கம் என்பது...
ஒரு பிரகாச இருப்பு மட்டுமே...
ஒரு ஒளி வடிவம் மட்டுமே...
அதனால்தான் தேவி கேட்கிறாள்...
நீ உண்மையில் என்ன?
🌸நீ நேசிக்கும்போது...
நீ மறுபடியும் குழந்தையைப்
போலாகிறாய்...
🌸தேவி கேட்கிறாள்...
"வியப்பு நிறைந்த இந்தப் பேரண்டம் யாது?"
தேவி, திடீரென்று சொந்தக் கேள்வியிலிருந்து...
ஒரு பொதுக் கேள்விக்குத் தாவுகிறாள்...
🌸உருவம் மறையும்பொழுது...
உன் அன்பிற்கினியவர்...
பேரண்டமாக, அரூபமாக...
எல்லையற்றவராக ஆகிவிடுகிறார்...
🌸தான் சிவனைப் பற்றிக் கேட்கவில்லை...
என்பதை தேவி உணர்கிறாள்.
அவள் முழு பேரண்டத்தைப் பற்றிக் கேள்வி கேட்கிறாள்...
🌸சிவாவே முழு பேரண்டமாக
மாறிவிட்டார்...
🌸இப்போது எல்லா நட்சத்திரங்களும்...
அவருள்ளே நகர்ந்து கொண்டிருக்கிறது...
எல்லாத் திடப் பொருள்களும்...
முழு வெளியும் அவரால் சூழப்பட்டுள்ளது...
🌸இப்போது...
தன்னகத்தே அனைத்தையும்
கொண்ட மிகப்பெரிய உண்மை அவர் ---
"எல்லாவற்றையும் சூழ்ந்து கொண்டிருப்பவர்"
🌸'கார்ல் ஜாஸ்பர்ஸ்' கடவுளை...
"எல்லாவற்றையும் சூழ்ந்திருப்பவர்" என்று வரையறுக்கிறார்.
Comments
Post a Comment