Google

ஆசைகள் அதிகமில்லை, கொஞ்சம்தான். - OSHO



ஆசைகள் அதிகமில்லை, கொஞ்சம்தான்.

ஆனால், அவை திரும்பத்திரும்ப வந்துகொண்டே இருக்கும்.

உங்களிடம் எத்தனை ஆசைகள் உள்ளது, எண்ணிப்பாருங்கள். அதிகமிருக்காது, கொஞ்சம்தான்.

உங்கள் விரல்களைப் பயன்படுத்தி எண்ணுமளவிற்கும் அவை இருக்காது. நீங்கள் கொண்டிருக்கும் ஆசைகள் ரொம்பக் குறைவு, உண்மையில், அடியாழத்தில் ஆராய்ந்து பார்த்தீர்களானால் இருப்பது ஒன்றே ஒன்றுதான்.

அதில், சில மாறுதல்கள் இருக்கலாம் ஆனால் உண்மையில் ஆசை ஒன்றே ஒன்று. அந்த ஆசை மட்டுமே திரும்பத்திரும்ப வருகிறது.

பிறவிகள் தோறும் தொடர்கிறது. திரும்பவும் அது தோன்றும்போது உங்களால் எதுவும் செய்ய முடிவதில்லை.

காரணம், "சக்கரச்சுழற்சிக்கான ஆற்றல் நீங்கள் தந்தது என்பதை முற்றிலுமாக மறந்து போய்விட்டீர்கள்.

கடந்தகாலத்தின் காரணமாகவே எதிர்காலம் செய்ததையே திரும்பச் செய்வதாகிறது.

கடந்தகாலம் மீண்டும் தனது சொந்த ஆசைகளை முன் விழும்படி வீசும்.

எனவே திரும்பத்திரும்ப வரும் ஆசைகளை முதலில் அறிந்து கொள்ளுங்கள்.

--ஓஷோ--

Comments