Google

மனிதன் கனவிலேயே வாழ்கின்றான் - OSHO




மனிதன் கனவிலேயே வாழ்கின்றான் :
====================================

ஒரு தடவை முல்லா நசுருதீனிடம் அவருடைய நண்பன் கிண்டலாக , “ நசுருதீன், உன்னுடைய மனைவி இரவில் தன்னுடைய காதலனுடன் உன்னுடைய மாந்தோப்பில் காதல் புரிந்து கொண்டிருக்கிறாள் “ என்று சொன்னான்.

முல்லா கம்பீரமானார். “ எப்போது அவள் வ்ருகிறாள் ? “ என்று கேட்டார்.

“ இங்கு ஏறத்தாழ இரவு ஒருமணிக்கு” என்றான் அவன்

 அந்த நாள் நசுருதீனின் பொழுது மன அமைதியற்றுக் கழிந்தது. இரவு உணவுகூட சாப்பிடவில்லை. இரவு பத்து மணி அடித்தது. தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு தோட்டத்திற்குச் சென்று ஒரு மரத்தின் மறைவில் உட்கார்ந்து கொண்டார். “ இன்று அவர்கள் இருவரையும் தீர்த்துக் கட்டுவது “ என்று முடிவு செய்திருந்தார்.

நேரம் போய் கொண்டே இருந்தது.

அவரது மனைவியும் வரவில்லை. அவளது காதலனும் வரவில்லை.

இரவின் அமைதியில் ஒரு மணி அடித்தது.

அப்போதுதான் அவருக்கு நினைவு வந்தது. “ தனக்கு திருமணம் ஆகவில்லை “ என்பது

 ஓஷோ : மனிதன் கனவிலேயே வாழ்கின்றான் , இந்த கனத்தில் வாழ்வதில்லை !

Comments