Google

நீ ஒருவரை உண்மையாகவே நேசித்தால் அவருடைய உடம்பு மறைந்து போகும் - OSHO



நீ ஒருவரை உண்மையாகவே நேசித்தால் அவருடைய உடம்பு மறைந்து போகும் . ஒரு சில கண நேர உச்சிகளில் அவருடைய உருவம் கரைந்து போய் விடும் .

அப்போது நீ உன் அன்புற்கினியவர் மூலமாக நீ உருவமற்ற தன்மைக்குள் நுழைவாய் .

ஏன் இப்படி நடக்கிறது ? உண்மையில் எல்லோருமே உருவமற்றவர்கள்தான் . நீ ஒரு உடம்பல்ல . நீ உடம்பாக நகர்கிறாய் . நீ உடம்பாக வாழ்கிறாய் . ஒருவரை நீ வெளியில் இருந்து பார்க்கும் பொழுது அவர் ஒரு உடம்பு .

அன்பு உள்ளே ஊடுருவுகிறது . பிறகு அந்த ஆளை நாம் வெளியே இருந்து பார்ப்பதில்லை . அன்பு ஒருவரை அவர் தன்னைத் தனக்குள்ளிருந்து பார்ப்பதைப் போல் பார்க்கிறது . அப்போது உருவம் மறைந்து போகிறது .

ரின்சாய் என்ற ஜென் துறவி ஞானமடைந்தார் . உடனே அவர் கேட்ட முதல் கேள்வி . என் உடம்பு எங்கே ? என் உடம்பு எங்கே போயிற்று ? தொடர்ந்து அவர் தேட ஆரம்பித்தார் .

அவருடைய சீடர்களை கூப்பிட்டு நீங்கள் போய் என்னுடைய உடம்பு எங்கே என்று கண்டுபிடியுங்கள் . நான் என் உடம்பை இழந்து விட்டேன் . அவர் அரூபத்தினுள் நுழைந்து விட்டார் . நீயும் ஒரு அரூப இருப்புதான்.

நீ உன்னை அடுத்தவர் கண்கள் மூலமாகவே அறிந்து கொள்கிறாய் . பிரதிபலிக்கும் கண்ணாடி இல்லையென்றால்
நீ உன் முகத்தை எப்படி அறிந்திருக்க முடியும் ? அப்போது உனக்கு முகம் என்பதே இல்லை . பிரதிபலிக்கும் கண்ணாடிகளே உனக்கு முகத்தைத் தருகின்றன .

நமக்கு நம் முகத்தைப் பற்றி அடுத்தவர் மூலமாகத்தான் தெரிந்து கொள்கிறோம் . ஆனால் அடுத்தவர்களுக்கு வெளி உருவம் மட்டுமே தெரியும் . இதனால்தான் நாம் இந்த வெளித் தோற்றத்துடன் நம்மை சேர்த்தே பார்க்கிறோம் .

அன்பில் நீ அடுத்தவரிடம் அவராகவே புகுகின்றாய் . நீ நீயாகப் புகுவதில்லை . நீ ஒன்றி விடுகிறாய் . முதல் முறையாக நீ ஒரு அரூப இருப்பை அறிகிறாய் .

ஓஷோ ..
தந்த்ரா ரகசியங்கள் ..

Comments