Google

வாழ்க்கையை உள்ளது உள்ளபடி நோக்க விரும்புகிறது தந்த்ரா - OSHO




🎊 வாழ்க்கையை உள்ளது உள்ளபடி நோக்க விரும்புகிறது
தந்த்ரா

மனம் வெளிப்பட்டு கலந்தால் உள்ளதை உள்ளபடி அறிய முடியாது

தந்த்ரா எல்லா வற்றிற்கும் ஆமாம் போடச் சொல்கிறது

இல்லை என்று சொல்லும்போது நாம் அகந்தை ஆகி விடுகிறோம்

இந்த முழுமையில் பகுதி எதுவும் நீங்கி விட்டால்

பிறகு முழுமை என்பதே இருக்க முடியாது

ஒரு துளி தண்ணீர் நீங்கி விட்டால் கூட

இந்த முழு இருப்பும்
தாகத்தில் தவிக்கும் என்று கூறப்படுகிறது

இந்த இருப்பில் இருக்கும் எல்லாமும் ஒன்றை ஒன்று தொடர்புடையவை

ஒரு பூவை பறித்து விட்டால்

பல விண்மீன்களும் பாதித்து விட்டது என்பதே பொருள்

இந்த இருப்பில் எல்லாமே ஓர் உயிர்த் துடிப்புள்ள முழுமையின் அங்கமாக விளங்குகின்றன

இல்லை என்பது நம்மைச் சுற்றி ஒரு எல்லையை உருவாக்கி விடுகிறது

ஆம் எனும் போது நமது இருப்பு விரிகிறது

நாம் மிதக்கிறோம்

இருப்பில் உருகிக் கலக்கிறோம்

நீங்கள் வாழ்க்கையை மறுத்தால் கடவுளும் மறுக்கப் படுகிறார்

வாழ்க்கைக்கும் கடவுளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை

மதங்கள் எல்லாம் உலகை மறுத்து கடவுளை ஏற்கச் சொல்கின்றன

வாழ்க்கையை மறுத்து ஒருபோதும் தெய்வீகத்தை அடைய முடியாது

ஆம் எனும் போது ஆழ்ந்த ஒப்புக் கொள்ளும் தன்மை நிகழும்

நீங்கள் முழுமையை ஒப்புக் கொள்ளும் போது ஒரு மாற்றம் வருகிறது

அப்போது கோபம் பேராசை போன்றவை மறைகின்றன

எல்லாவற்றையும் நமக்குள் ஐக்கியப் படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறது தந்த்ரா

அப்போது அது நமக்குள் மிகப் பெரிய ஆற்றலாகி விடும்

புத்தர், இயேசு ஆகியோர் தங்களைச் சுற்றி மிகப் பெரிய காந்த சக்தியை கொண்டவர் களாக இருந்தார்கள்

எளிமையோடு அடக்கத்தோடு வாழ்க்கை தரும்
எல்லாவற்றையும் கொடையாக ஏற்றுக்கொள்ளுங்கள்

தூய்மை
தெளிவு
கன்னிமை
உங்களிடம் மலரும்

அனுபவத்தின் மூலமாகவே நாம் எதையும் கடந்து செல்ல முடியும்

நீ நீயாகவே இரு என்கிறது தந்த்ரா

நாம் சாதிப்பதும் அது ஒன்றே
எதையும் ஏற்கும் போது ஆசை மறையும்

எந்த வித பயிற்சி இன்றியே ஆசையின்மை தானே அமையும் 🎊

🎉 ஓஷோ
தந்த்ரா
ஓர் உன்னத ஞானம் 🎉

Comments