உன்னுடைய எண்ணங்களுக்கு சக்தி கொடுக்காதே*
*உன்னுடைய எண்ணங்களுக்கு சக்தி கொடுக்காதே*
ஒரு கவனிப்பவனாக மட்டுமே,
ஒரு சாட்சியாக மட்டுமே இரு
தொடர்பற்றவனாக,
தொலைவில் இருப்பவனாக,
வேறுபட்டவனாக இரு
எண்ணங்களை வெறுமனே பார்
அதனுடன் எந்த வகையிலும் ஈடுபாடு கொள்ளாதே,
அதனுடன் இணைந்தோ அதற்கு எதிராகவோ இருக்காதே
ஒரு கவனிப்பவனாக மட்டுமே இரு
மன ஓட்டம் நிகழட்டும்,
ஓரத்தில் நின்று அதை வேடிக்கை பார்
அதனுடன் நீ எந்த தொடர்பும் கொள்ளாமல்,
அதனால் எந்த பாதிப்பும் அடையாமல்,
தள்ளி நின்று பார்
எதுவும் செய்யாமல் அமைதியாக உட்கார்ந்து
என்ன நிகழ்ந்தாலும் கவனி
உன் உள்ளத்தில் என்ன உணர்வுகள் வந்தாலும்
ஒரு கவனிப்பவனாக மட்டுமே இருந்து கவனி
ஆன்மீகத்தின் எளிய ரகசியமே இதுதான்,
ஒரு சாட்சியாக இரு
மனதை விட்டுவிடு,
கவனிப்பவனில் மேலும் மேலும் மையம் கொள்
கவனிப்பவனில் நீ மையம் கொண்டிருந்தால்
நடப்பவை யாவும் கடந்து செல்பவை மட்டுமே
முழுமையான சாட்சிபாவம் பெற,
முழுமையான கவனிப்பவனாக மாற
சிறிதுகாலம் பிடிக்கும்
பொறுத்திரு
தனிமை ஆக்க பூர்வமானது
ஆரோக்கியமானது
அது நீங்கள் நீங்களாகவே இருக்க முடிகிற மகிழ்ச்சி
தியானம் என்பது தனித்திருத்தலின் பரம சுகம் (bliss)
ஒருபோதும் யாரையும் சாராமல் வாழ முடிகிற போது
ஒருவர் உண்மையிலேயே வாழ்பவர் ஆகிறார்
உண்மையான தனிமையை நோக்கி செல்வதுதான் அகமுகப் பயணம்
அங்கே உங்களோடு யாரையும் அழைத்துச் செல்ல முடியாது
நீங்கள் உங்கள் உள்ளே செல்கிற கணத்தில் வெளியுலகுடன் தொடர்பு துண்டிக்கப் படுகிறது
உண்மையில் ஒட்டு மொத்த உலகமும் மறைந்து போகிறது
தியானிப்பவர் தனக்குள் செல்கிற போது வெளியுலகம் மறைந்து போகிறது
தனிமையில் இருந்தே பரம சுகம் தோன்றுகிறது
அந்த தூய வெளியில் கரைந்து விடுங்கள்
தியானம் என்பது உங்களுடைய உண்மையான
சுயத்தை அக நிலைப் பண்பை உயர்த்துகிறது
ஒரு மனிதன் தன்னுடைய உண்மையான சுயத்தைக்
கண்டு கொண்டு விட்டாலே போதும்
அவன் தனித் தன்மை வாய்ந்தவன் ஆகி விடுகிறான்
அவன் தான் பெற்ற மெய்யறிவுக்கு ஏற்பவே அவன் வாழ்கிறான்
அவனுடைய வாழ்க்கை பேரழகும் நேர்மையும் கொண்ட தாயிருக்கும்
உங்கள் உள்ளுணர்வு திறனை வளர்த்துக்
கொள்ளவே தியானம் உதவுகிறது.
ஓஷோ
Comments
Post a Comment