மனம் கடந்தஅனுபவம் பெறுவது எப்படி ? - OSHO
மனம் கடந்தஅனுபவம் பெறுவது எப்படி ?
வாழ்க்கை பரவசங்கள் நிறைந்தது .
சாதரணமாக அதைக் காணும் கண் நமக்கு இல்லை .
அதை ஒதுக்கி விடுகிறோம் .
ஆனால் அதைக் காண்பதை
நம்மால் உருவாக்க முடியும் .
உருவாக்க முடியும் என்று சொல்வது கூட சரி இல்லை தான் .
அது அங்கே தான் எப்போதும் இருக்கிறது .
விழிகளைத் திறந்தால் போதும் .
அப்புறம் - எல்லாமே மாறிவிடும் .
தியானம் அதைச் சாதித்துக் கொடுக்கிறது .
தியானம் என்றால் , அமைதி; வெறுமை !
அந்த வெறுமை , ஒன்றும் இல்லாமை
அங்கே தான் இருக்கிறது .
ஆனால் , அது நம் சிந்தனைகளின்
பெருக்கத்தால் மூடப்பட்டு இருக்கிறது .
சிந்தனைகள் அற்றுப் போனவுடனே
அது வெளியே தெரிந்து விடுகிறது .
எண்ணங்கள் அற்று இருப்பது
கடினம்போலத்தான் தோன்றுகிறது .
ஆனால் , அது மிகவும் எளிதானது !.
மனம் நிம்மதி அற்று இருக்கிறது .
ஆனால் , அதை எளிதில்
நிம்மதி அடையச் செய்து விடலாம் !
அந்த நிலைக்கான திறவுகோல்
கவனத்தல் தான் !
சும்மா பார்த்தல் !
ஒருவர் அதைக் கவனிக்க வேண்டும் .
சும்மா பார்க்க வேண்டும் .
பார்க்கும் நிலை பிறந்தவுடனே ,
எண்ணங்களில் இருந்து விடுதலை
அந்தக் கணத்திலேயே !
இது தான் பரவச நிலையின் கதவுகளைத் திறந்து விடும் .
அப்புறம் இந்த உலகமே
ஒரு புது உலகமாய் மாறிவிடும் .
தொடர்ந்து தியானம் செய்யுங்கள் ..
பலன்கள் மெதுவாகவே வரும் .
அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் .
அது நிச்சயம் வரும் .
--- ஓஷோ ---
Comments
Post a Comment