Google

சாட்சித்தன்மை (எளிய புரிதல்)... ஓஷோ



சாட்சித்தன்மை
எளிய புரிதல்...
ஓஷோ

கேள்வி:
🍁வெறுமனே பார்ப்பதன் மூலமே,

மூளை அணுக்களில் இருக்கும் பதிவுகளைக் கவனித்தபடி சும்மா இருப்பதன் மூலமே,

சிந்தனை நிகழ்முறையின் ஆதாரங்கள்...

"மறைந்துவிட முடியும்" என்பது
எப்படிச் சாத்தியம் ஆகிறது என்பதை...

தயவுசெய்து விளக்கப் படுத்துங்கள்.

ஓஷோ:

🌸ஒரு போதும் அவை
மறைந்துவிடுவதில்லை...

🌸ஆனால், சாட்சியாக மட்டும்
இருப்பதன் வாயிலாக...

"அடையாளப்படுத்திக் கொள்ளும்
செயல் அறுபடுகிறது..."

🌸தான் ஞானநிலைபேறு
பெற்றதற்க்குப் பின்னும்...

நாற்பது ஆண்டுகள் புத்தர்
தன் உடம்புடன் உயிர் வாழ்ந்தார்...

உடம்பு இல்லாமல் போய்விடவில்லை...

🌸நாற்பது ஆண்டுகள் தொடர்ச்சியாக...

அவர் பேசிக்கொண்டும்...
விவாதித்துக் கொண்டும்... இருந்தார்....

🌸தனக்கு நிகழ்ந்திருக்கிறது என்ன?

அதுவே மற்றவர்களுக்கும்...
எப்படி நிகழமுடியும் என்பதை...

மக்கள் புரிந்துகொள்ளுமாறு
பேசிக் கொண்டு வந்தார்...

🌸அதற்கு அவர்...
மனதைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்...

மனம் மறைந்து போயிருக்கவில்லை...

🌸மேலும், பன்னிரெண்டு
ஆண்டுகளுக்குப் பின்...

தன் சொந்த ஊருக்கு
அவர் திரும்பி வந்தபோது...

தன் தந்தையை அடையாளம்
கண்டு கொண்டார்...

தன் மனைவியை அடையாளம் கண்டார்,
தன் மகனை அடையாளம் கண்டார்...

🌸"மனம் இருந்தது...
நினைவு இருந்தது...

இல்லாவிட்டால் நினைவு கூறுதல்
சாத்தியம் இல்லை..."

🌻"மனம் உண்மையில் இல்லாமல்
போய்விடுவது இல்லை..."

🌻"மனம் இல்லாது ஒழிகிறது..." என்று
 நாம் கூறும்போது...

"மனதுடனான உங்களின்
அடையாளப்படுத்துதல் அறுபடுகிறது"
என்றே கூறுகிறோம்...

🌻அது மனம் -- இது நான்...

என்பதை இப்போது நீங்கள்
அறிகிறீர்கள்...

"பாலம் உடைந்து விட்டது..."

🌻"இனி மனம் எஜமானன் அல்ல,

இனி அது ஒரு கருவியாக மட்டுமே இருக்கிறது...

தன் சரியான இடத்துக்கு அது
வந்து சேர்ந்துவிட்டிருக்கிறது...

🌻எனவே, தேவைப்படும் போதெல்லாம்
அதை நீங்கள் பயன்படுத்த முடிகிறது...

🌻நீங்கள் ஒரு விமானியாக இருந்து...

ஒரு விமானத்தில் பறந்து கொண்டிருப்பது போன்றதே இது...

பல விசைகளை நீங்கள் இயக்குகிறீர்கள்...

பல கருவிகள் மீதும் உங்கள்
கண்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றன...

🌻தொடர்ச்சியாக இதையும், அதையும்
குறித்து கவனமாக இருந்து
கொண்டிருக்கிறீர்கள்.

"ஆனால், நீங்கள் கருவிகள் அல்ல..."

🌻உடல் --- மனம்...இந்த யந்திர அமைவில்
நீங்கள் இரண்டு விதமாக இயங்க முடியும்...

🌻உங்களை நீங்களே மறந்து...
உங்களையே...அந்த எந்திர அமைப்பாக உணருதல்...

இது அடிமைத்தனம்.

இது அவலம். இதுவே உலகம்.

🌻இயங்குவதிலே உள்ள
இன்னொரு விதம் இதுதான்:

 நீங்கள் தனியானவர் என்பதில்
முழு கவனமாக இருத்தல்...

நீங்கள் பயன்படுத்திக் கொண்டு மட்டும் போவீர்கள்...

இப்போது மாபெரும் வேறுபாடு இருக்கிறது...

🌻இப்போது முதல்...
நீங்கள் யந்திரம் அல்ல...

ஆகவே யந்திரத்தில் ஏதாவது
கோளாறு ஏற்படுமானால்
அதை நீங்கள் சரிசெய்ய முடியும்...

ஆனால், அதற்காக நீங்கள் கலங்கமாட்டீர்கள், குழம்பமாட்டீர்கள்,

மொத்த யந்திர அமைவும்...
மறைந்து போனாலும்....அதனால் நீங்கள் அலைக்கழிக்கப்பட மாட்டீர்கள்.

🌸புத்தர் இறக்கும் விதமும்,
நீங்கள் இறக்கும் விதமும்,

இரண்டு வெவ்வேறு நிகழ்வுகளாகும்...

🌸"புத்தர் மரணமடையும் போது...

யந்திரம் மட்டுமே இறந்து கொண்டிருக்கிறது...
என்பதை அறிந்தபடியே இருக்கிறார்..."

அது பயன்படுத்தப்பட்டது...

இப்போது தேவையற்றுப் போயிருக்கிறது...

ஒரு சுமை இறக்கப்பட்டு இருக்கிறது...

🌸அவர் விடுபட்டுக் கொண்டு
இருக்கிறார்...

இனி அவர் உருவமின்றியே
இயங்குவார்...

🌸ஆனால் நீங்கள் இறக்கும் விதமோ,
முற்றிலும் வேறுவிதமாக இருக்கிறது...

நீங்கள் துன்புறுகிறீர்கள்...
நீங்கள் அழுது புலம்புகிறீர்கள்.

ஏனெனில் இறப்பது யந்திரமல்ல...

நீங்களே இறந்த....
அழிந்து கொண்டிருப்பதாக
நீங்கள் கருதுகிறீர்கள்...

அது சவாலாக இருக்கிறது...
அது கடுமையான வேதனையாக இருக்கிறது...

🌸சாட்சியாய் இருப்பதன் மூலம்...
 "அடையாளப்படுத்திக் கொள்ளுதல்"
மறைகிறது...

மனம் மறைவதில்லை.

🌸முற்றிலும் புதிய ஒரு பிறவியாக
நீங்கள் இருக்கிறீர்கள்...

"முதல் தடவையாக உங்களின்
உண்மையான சிறப்பை...

உங்களின் மெய்யான மெய்மையை
நீங்கள் அறிய வந்திருக்கிறீர்கள்..."

🌸"நீங்கள் யார்?" என்பதை...

 வாழ்க்கையிலேயே முதல்முறையாக
நீங்கள் அறிய வருகிறீர்கள்...

இனி உங்களைச் சூழந்துள்ள
யந்திர அமைப்பின்...

ஒரு பகுதியாக  மட்டுமே...
மனம் இருக்கிறது.

🌻வெறுமனே கவனிப்பதன்
மூலம், மனம் இல்லாமல் போய்விடாது...

மூளை அணுக்கள் மறைந்து
போய்விடாது...

மாறாக அவை கூடுதல் ஆற்றல்
உள்ளதாகவே ஆகும்.

🌻ஏனெனில்,
முரண்பாடு குறைவாக இருக்கும்:

ஆற்றல் அதிகமாக இருக்கும்.

எனவே, அவை அதிக புத்துணர்ச்சி
உள்ளவையாக விளங்கும்...

🌻அவற்றை மேலும் சரியாக...
மேலும் நுட்பமாகப் பயன்படுத்த முடியும்...

🌻நீங்கள் பாரம் சுமக்கிறவர்களாக
ஆகிவிட மாட்டீர்கள்:

ஏதாவது ஒன்றை செய்யும்படி
உங்களை அவை நெருக்காது..

இங்கும், அங்கும் உங்களை அது
இழுத்தடிக்கப்பட மாட்டாது...

நீங்களே அதிகாரியாக இருப்பீர்கள்...

🌸வெறுமனே சாட்சியாய்
இருப்பதன் மூலம் இது எப்படி
சாத்தியமாகிறது?

சாட்சியாய் இருந்து கவனித்தால்...
தளை ஏற்படாது.

நீங்கள் விழிப்புள்ளவராக இருந்தால்...
தளை மறைந்து விடும்...

விழிப்புணர்வில்லாமைதான்...
தளை.

🌸"எதை நீங்கள் செய்வதாயினும்
அதில் கூடுதல் கவனம்
உள்ளவராக ஆகுங்கள்..."

வேறெதுவும் செய்யத் தேவையில்லை.

🌿ஓஷோ🌿

Comments