Google

அன்பிற்கு எந்த அடிக்குறிப்பும் தேவையில்லை. - Osho




தம்மபதம் ,ஓஷோ

அன்பிற்கு எந்த அடிக்குறிப்பும் தேவையில்லை.

அதுதான் அன்பின் அழகு.

அதுதான் அன்பின் சுதந்திரம்.

வெறுப்பு ஒரு பந்தம்.

ஒரு சிறை.

உங்கள் மீது திணிக்கப்படுவது.

வெறுப்பு வெறுப்பையே உருவாக்கும்.

வெறுப்பையே கிளறிவிடும்.

ஒருவரை நீங்கள் வெறுக்கும் பொழுது அவர் மனதில் உங்களுக்கெதிரான வெறுப்பை உருவாக்கி விட்டுவிடுவீர்கள்.

உலகமே வெறுப்பிலும் அழிவிலும் வன்முறையிலும் போட்டியிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

ஒருவர் குரல்வளையை ஒருவர் நெரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

செயலாலோ மனதாலோ ஒவ்வொருவரும் மற்றவரைக் கொன்று கொண்டிருக்கிறார்கள்.

அதனால்தான் ஒரு சொர்க்கம் ஆகக்கூடிய இந்த உலகை நரகமாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம்.

அன்பு செய்யுங்கள்.
இந்த உலகம் மீண்டும் சொர்க்கமாகும்.

அன்பின் எல்லையற்ற அழகே..அதற்கு அடிக்குறிப்பு தேவையில்லை என்பதுதான்.

அன்பு காரணமில்லாது நிகழ்வது.

அது உங்கள் பரவச வெளிப்பாடு.

உங்கள் இதயத்தின் பகிர்வு.

உங்கள் இருப்பின் பாடலைப் பங்கிட்டுக் கொள்வது.

உங்கள் மகிழ்வைப் பகிர்ந்து கொள்வது.

உண்மை அன்பு உங்கள் உள்ளத்தின் மகிழ்ச்சியின் இடையறாத வெளிப்பாடு.

அதைப் பகிர்ந்து கொள்வதற்கும்,
பொழிந்து கொள்வதற்கும் காரணமே தேவையில்லை.

 பகிர்ந்து கொள்ளும் மகிழ்விற்காகவே பகிர்ந்து கொள்வது.

காலையில் பறவைகள் பாடுகின்றன.

ஒரு குயில் தூரத்திலிருந்து அழைக்கிறது.

காரணம் இல்லாமல்தான்.

இதயத்தில் நிறைந்த மகிழ்ச்சி ஒரு பாடலாக வெடித்துப் பீரிடுகிறது.
நான் சொல்லும் அன்பு அதுவே.

அப்படிப்பட்ட அன்பின் பரிமாணத்திற்குள் நீங்கள் பிரவேசிக்க முடியுமானால்..அதுவே சொர்க்கம்.

அப்போது நீங்கள் பூமியில் ஒரு சொர்க்கத்தைப் படைத்து விடுவீர்கள்...!!

இவ்வுலகில் வெறுப்பு வெறுப்பை விரட்டாது.

அன்பே வெறுப்பை விரட்டும்.
இதுதான் விதி.

தொன்மையான தீர்ந்து போகாத விதி.

உண்மையான அன்பு உங்கள் உள்ளத்தின் மகிழ்ச்சியின் இடையறாத வெளிப்பாடு.

அதைப் பகிர்த்து கொள்வதற்கும் பொழிவதற்கும்
காரணமே தேவையில்லை.

வேறு நோக்கமே தேவையில்லை.பகிர்ந்து கொள்ளும் மகிழ்விற்காகவே பகிர்ந்து கொள்வது.

வெறுப்பு வெறுப்பை உருவாக்கி விடுவதுபோல
அன்பு அன்பையே உருவாக்கும்.

அன்பு செய்யுங்கள்.இந்த உலகம் மீண்டும் சுவர்கமாகும்.

அன்பின் எல்லையற்ற அழகே அதற்கு எந்த அடிக்குறிப்பும் தேவை இல்லை என்பதுதான்.

அன்பு காரணமில்லாமல் நிகழ்வது.

அது உங்களின் பரவசத்தின் வெளிப்பாடு.

உங்கள் இதயத்தின் பகிர்வு.

உங்கள் இருப்பின் பாடலைப் பகிர்ந்து கொள்வது.

உங்கள் மகிழ்வைப் பகிர்ந்து கொள்வது.

------புத்தரின் தம்மபதம்.

Comments