Google

தந்த்ரா நோக்கு (Tantra vision) - OSHO

. . . . . . . .தந்த்ரா நோக்கு. . . . . . . . .


மனிதன் கண்ட கனவுகளிலே மிகப்பெரியது. "தந்த்ரா நோக்கு" (Tantra vision).

இது பூசாரி இல்லாத சமயம்;

கோயில் இல்லாத சமயம்;

நிறுவனம் ஏதும் இல்லாத சமயம்;

தனி நபரை மதிக்கும் சமயம்;

தனி நபரின் தனித்தன்மையைப் பாராட்டும் சமயம்;

சாதாரண ஆணையும்,பெண்ணையும் பெரிதும் நம்பும் சமயம்;

இந்த முழு நம்பிக்கை மிகுந்த ஆழம் உடையது.

தந்த்ரா உங்கள் உடலை முழுவதுமாய் நம்புகிறது.வேறு எந்த சமயமும் உங்கள் உடலை நம்புவதில்லை.

இதனால் அவை உங்களுக்கும் உங்கள் உடலுக்கும் இடையில் பிளவு ஏற்படச் செய்கின்றன.

அவை உங்களை உடலின் பகைவர்களாக்கி விடுகின்றன.அவை உடலின் ஞானத்தை,அறிவை அழித்து விடுகின்றன.

தந்த்ரா உங்கள் புலன் உணர்வுகளை மதிக்கிறது,உங்கள் சக்தியை,ஆற்றலை மதிக்கிறது,நம்புகிறது.

தந்த்ரா உங்கள் மேல் முழு நம்பிக்கை வைத்துள்ளது.அது எதையும் தவிர்க்க நினைப்பதில்லை.

அது எல்லாவற்றையும் மாற்றி மேம்படுத்தி விடுகிறது.அது உங்களை ஊக்குவிக்கிறது,உங்களை உள் நோக்கி அனுப்புகிறது,உங்களை கடந்து செல்ல வைக்கிறது.

உடலே முக்கியமாக உள்ளது.உடலே உங்கள் அடித்தளமாய் உள்ளது.இதுதான் உங்கள் களமாய் உள்ளது.

இத்தரையில் தான் நீங்கள் வேரூன்றி நிலைத்திருக்கிறீர்கள்.

உங்கள் உடலை அவமதிக்கும் போதெல்லாம் நீங்கள் மெய்மையை அவமதிக்கிறீர்கள்.

உங்கள் உடல்தான் மெய்மையுடன் உள்ள தொடர்பாய் உள்ளது.உடலே பாலம் போல் உள்ளது.உங்கள் உடலே கோயிலாக உள்ளது.

தந்த்ரா உங்களுக்கு உங்கள் உடலை அன்புடன் மதித்து வணங்கிப் போற்றியவாறு வாழக்கற்றுக் கொடுக்கிறது.

உடலை மரியாதை செலுத்தவும்,அதனிடம் நன்றியுணர்வுடன் இருக்கவும் கற்றுக் கொடுக்கிறது.

உடலில் விந்தைகள் நிறைந்துள்ளன.

உடலை விட பெரிய மர்மம் வேறு ஒன்றுமே இல்லை.

--ஓஷோ--

Comments