Google

வாழ்க்கை ஒரு பரிசு 💕

வாழ்க்கை ஒரு பரிசு 💕


கீதையின் கருத்துக்கள் நிருபணம் ஆக வேண்டும் என இந்துக்கள் போராடுகின்றர். பைபிள் கருத்துக்கள் நிருபணம் ஆகவேண்டும் என கிறித்துவர்கள் விரும்புகின்றனர். குர்ரான் கருத்துக்கள் நிருபணம் ஆகவேண்டும் என முகம்மதியர்கள் கூறுகின்றனர்.

ஆனால் யாரும் 'உண்மை' வெல்ல வேண்டும் என கருதுவதே இல்லை.

"உண்மைக்கு ஆள் இல்லை. அது அனாதை"

"எனது ஆர்வமெல்லாம் 'உண்மையைப்' பற்றியே"

உண்மை ஒவ்வொரு நாளும் புதிய புதிய பரிணாமங்களை திறந்து காட்டுகிறது. பழைய புத்தகங்களும், பழைய மதத் தலைவர்களும் ஒதுக்கப்பட வேண்டிய அம்சங்கள்.

பழைய மதத் தலைவர்கள் அனைவரும் வாழ்க்கையை மறுத்து வருகின்றனர். அதை ஒரு தண்டனையாகக் கருதுகின்றனர்.

இந்துக்கள்,கிறித்துவர்கள்,ஜெயினர்கள்,முகம்மதியர்கள்,புத்த மதத்தினர் அனைவரும் வாழ்க்கையை மனித வர்க்கம் பெற்ற தண்டனை என்றே போதித்தனர்.

வாழ்க்கை ஒரு தண்டனைக்குரியது எனில் தற்கொலை கண்டனத்திற்கு உரியது அல்ல. அதைத் தவிர தப்பிக்க வழி இல்லை.

ஆனால்,  நான் கூறுகிறேன். உங்கள் முன் உள்ள வாழ்க்கை உங்களுக்கு கிடைத்த அளப்பரிய அன்பளிப்பு. அது ஒரு பரிசு. குறை அல்ல. நீங்கள் வாழ்வையும், உணர்வையும் ஒருசேரப் பெற்றுள்ளீர்கள்.

" நீங்கள் தனித்துவம் வாய்ந்தவர்கள். மரம் உயிரோடு இருக்கிறது.அதற்கு உண்ர்வு இல்லை. விலங்குகளுக்கு மூளை இருக்கிறது. விழிப்புணர்ச்சி இல்லை. மனிதனே இவையனைத்தும் பெற்றுள்ள பாக்கியசாலி.

Comments