ஹாரா தியானத்தின் பயன்கள்
*ஹாரா தியானத்தின் பயன்கள் 💝
🌸நீங்கள் ஹராவை அதிகம் நினைவில் கொள்ளும்போது எண்ணங்கள் குறைந்துவிடும்.
🌸தானாகவே எண்ணங்கள் குறையும். காரணம் தலைக்கு நகரும் சக்தி குறைந்துவிடும், அது ஹராவிற்கு செல்லும்.
🌸நீங்கள் ஹராவை அதிகம் நினைக்கும்போது, நீங்கள் அதில் அதிக கவனம் செலுத்துகிறீர்கள்.
🌸உங்களுக்குள் அதிகமான ஒழுங்கு எழுவதை காண்பீர்கள். அது இயற்கையாக வரும்; அதை திணிக்கவேண்டியதில்லை.
🌸நீங்கள் ஹராமையத்தை பற்றி அதிக அளவில் விழிப்பு கொள்ளும்போது, நீங்கள் இறப்பைப்பற்றி குறைவாக அஞ்சுவீர்கள், காரணம் அதுதான் இருப்பிற்கும், இறப்பிற்குமான மையம்.
🌸ஒருமுறை நீங்கள் அந்த ஹராமையத்தோடு இசைந்துவிட்டால், நீங்கள் தைரியமாக வாழலாம். அதிலிருந்து துணிச்சல் வருகிறது
🌸குறைவான சிந்தனை, அதிக மெளனம்,மனமற்ற நிலை, இயற்கையான ஒழுங்கு, தைரியம், வேரூன்றுதல் நிகழ்கிறது.
🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️🧘♂️
--ஓஷோ விழிப்புணர்வு தியான குழு
Comments
Post a Comment