Google

ஏன் இவ்வளவு வறுமை , பசி , பட்டினி எல்லாம் ?

கேள்வி : - 

ஓஷோ , கடவுள் மிகுந்த கருணையுடையவன் . அள்ளி அள்ளிக் கொடுப்பவன் என்று கூறுகிறார்கள் .

 அப்படியென்றால் ஏன் இவ்வளவு வறுமை , பசி , பட்டினி எல்லாம் ? "

#ஓஷோ பதில் : - 

" கர்ம விதி , உங்களுக்கு எது எவ்வளவு கிடைக்க வேண்டும் என்பது உங்கள் உழைப்பைப் பொறுத்துத்தான் அமையும் " என்று கூறுகிறது .

ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுவது என்னவென்றால் , ' பாபிகளும் , புண்ணியம் செய்தவர்களும் , நல்லவர்களும் , கெட்டவர்களும் - இப்படி எல்லோருமே கடவுளின் கொடைத் தன்மையால் வாரி வழங்கப்படுகிறார்கள் ' என்பதுதான் !

ஆனால் நீங்கள் அதை வாங்கத் தயாராக இல்லை . 

திறந்த மனத்தோடு நீங்கள் வாங்கத் தயாராக இ
ல்லை . 


இதற்கு என்ன அர்த்தம் ?

கடவுள் எப்போதும் நிகழ் காலத்தில்தான் இருக்கிறார் . 

அவருக்கு வருங்காலம் என்றோ , இறந்த காலம் என்றோ எதுவும் இல்லை .

 அவர் இப்பொழுது இங்கே கணத்துக்குக் கணம் செயல்படுகிறார் . 

ஆனால் நீங்களோ ஒன்று எதிர்காலத்தில் இருக்கிறீர்கள் அல்லது இறந்த காலத்தில் இருக்கிறீர்கள் .

 நீங்கள் நிகழ்காலத்தில் ஒருபோதும் இருப்பது இல்லை .

நீங்கள் எப்பொழுது நிகழ்காலத்தில் இருக்கிறீர்களோ அப்பொழுது அவர் அளிக்கும் கொடையைக் கண்டு பிரமிப்பு அடைவீர்கள் .

 போதும் போதும் என்று கூறுவீர்கள் .

 நான் இதை என் அனுபவத்தில் கூறுகிறேன் . 

இது தத்துவமல்ல ; 

என் அனுபவத்தை உங்களுக்குக் கூறுகிறேன் .

ஆகவே நீங்கள் எதிர்காலம் , இறந்தகாலம் என்ற நிழலின் பின்னாலேயே ஓடாதீர்கள் . 

உண்மையை உண்மையாக இப்பொழுது இங்கே சந்திக்கத் தயாராக இருங்கள் . பிறகு பாருங்கள் . 

புரியும் . " ...

Comments