இதயம் சொல்வதைக் கேட்கக் கற்றுக் கொள்ளுங்கள். OSHO
இதயம்
இதயம் சொல்வதைக் கேட்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
மனம் உங்களுடையது அல்ல.
அது சமுதாயத்தால் உங்களுக்கு கொடுக்கப் பட்டது.
இதயம் தான் கடவுளால் உங்களுக்கென கொடுக்கப் பட்டது.
நீங்கள் இதயம் சொல்வதைக் கேட்டால் தியானம் என்பது கடினமாக இருக்காது.
எளிதாக அடைய முடியும்.
பிறகு எந்த பிரச்னையும் இல்லை.
நீங்கள் தெளிவாக இருக்கிறீர்கள்.
நீங்கள் பொருட்களை அவற்றின் தன்மை மாறாமல் பார்க்கிறீர்கள்.
பிறகு எதைச் செய்யலாம் எதைச் செய்யக் கூடாது என்பது பற்றிக் கேள்விகளே எழுவதில்லை.
எதைச் செய்ய வேண்டும் என்பது உங்களுக்கு
உடனடியாகத் தெரிந்து விடுகிறது.
எது செய்வதற்கு சரியான காரியம் என்பதை உங்களால்
எளிதாகத் தெரிந்து கொள்ள முடியும்.
மேலும் நீங்கள் ஒருபோதும் வருந்த மாட்டீர்கள்.
❤️ஓஷோ❤️
Video
Comments
Post a Comment