Google

சுய விழிப்புணர்வு அடைதல்/மையம் கொள்ளுதல் - OSHO



சுய விழிப்புணர்வு அடைதல்/மையம் கொள்ளுதல்
ஒருவருக்கு மிகவும் முக்கியமானதாகும்,
இல்லாவிடில் அவர் துண்டு துண்டாக உணர்வார்.
முழுமையாக இருப்பதாக உணர மாட்டார்.
அவர் துண்டாடப்பட்ட புதிராக இருப்பார் – துண்டுகளாக இருப்பார், இணைந்து முழுமையானதாக, ஒன்று சேர்ந்த உருவமாக இருக்கமாட்டார்.
அது ஒரு மோசமான இணைப்பாக இருக்கும், மையமின்றி இருக்கும் மனிதனால் அன்பு செய்ய முடியாது, அவன் இழுத்துக் கொண்டு அலையலாம்.
மையமின்றி இருக்கும்போது நீ உன் வாழ்வில் தினசரி செயல்களை செய்யலாம், ஆனால் உன்னால் உருவாக்குபவனாக இருக்க முடியாது.
நீ குறைந்த பட்சம் மட்டுமே வாழ முடியும்.
அதிக பட்சம் உனக்கு சாத்தியமே இல்லை.
மையத்தின் மூலம் மட்டுமே ஒருவர் அதிக பட்சமாக, சிகரத்தில், உச்ச கட்டத்தில், முடிந்த வரை முழுமையாக வாழ முடியும்.
அதுதான் உண்மையான வாழ்க்கை, அதுதான் வாழ்வது.
*ஓஷோ*


Comments