சாக்ரடீஸ் ஏன் கொல்லப்பட்டார் ? - OSHO
ஒரு பைத்தியக்காரனை மாற்றமடையச் செய்ய நீங்கள் அவனுடைய மொழியைக் கற்றாக வேண்டும். நீ அவனைப் போல காட்சியளித்து அவனுடைய நிலைக்கு கீழே இறங்கி வந்து அவனுடைய மொழியில் பேச வேண்டும். நீ மேதாவியாக உயரே நின்றிருந்தால் அவனை ஒருகாலும் உன்னால் தொடர்பு கொள்ள முடியாது. சுவாங்க்சு என்ற ஞானி முட்டாளைப் போல சிரித்துக் கொண்டும் நகைச்சுவையாக பேசிக் கொண்டும்.. எந்நேரமும் விளையாடிக்கொண்டும் இருந்ததால் எல்லா மக்களாலும் அவர் கவரப்பட்டார். அனைவரையும் நேசித்ததன் மூலம் அறிவு விதையை அவர் விதைத்தார். அவர் அனேகரை மாற்றமடையச் செய்திருக்கிறார்.
சாக்ரடீஸ் அதற்கு நேரெதிரானவர். கிரேக்க மனம் இயல்பாகவே பகுத்தறிவு மனமாக தான் இருந்தது. பகுத்தறிவு மனம் எப்போதும் முட்டாளைப் போல நடந்துக் கொள்ள முயற்சிக்காது. அதனால் சாக்ரடீஸ் தன்னுடைய பகுத்தறிவின் மூலமாக மக்களை அவர் கோபமடையச் செய்தார். மிகச் சிக்கலான கேள்விகளைக் கேட்டு மற்றவர்களை முட்டாளாக்கினார். எல்லோரையும் புத்திசாலித்தனமாகக் கேள்விக் கேட்டு மடக்கினார். அவருடைய ஒரு கேள்விக்கு கூட ஒருவராலும் பதில் சொல்ல முடியவில்லை . கடவுள் இருக்கிறார் என நீங்கள் சொன்னால்... அதுகுறித்து ஆயிரம் கேள்விகளை அவர் எழுப்புவார். கடவுளை யாரால் நிரூபிக்க முடியும். வெகு தூரத்திலிருப்பவரை யாரால் கண்ணெதிரில் காட்ட முடியும்.
சாக்ரடீஸ் எல்லோரையும் தட்டியெழுப்ப முயன்றுகொண்டிருந்தார். மிக ஆழமான கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தார். அதனால் ஏதென்ஸ் நகரிலுள்ள எல்லா மக்களும் கோபமடைந்தனர். சாக்ரடீஸ் எல்லோரையும் முட்டாள்கள் என நிரூபிக்க முயன்று கொண்டிருந்தார். ஏதென்ஸ் நகர மக்கள் அவரை கொன்றனர். இவர் வாழ்ந்த அதே காலத்தில் தான் சுவாங்க்சூவும் சீனாவில் வாழ்ந்து வந்தார். ஒருவேளை சாக்ரடீஸ் அவரை சந்தித்திருந்தால் இந்த இரகசியத்தை சொல்லிக் கொடுத்திருப்பார்.
''யாரையும் முட்டாளாக்க நினைக்காதே ஏனெனில் முட்டாள்கள் அதை விரும்புவதில்லை. பைத்தியக்காரனிடம் அவன் பைத்தியம் என சொல்லாதே .. அவன் கோபமடைவான். நீ அவனைவிட உயர்ந்தவன் என நிரூபிக்கப்பட்டால் அவன் உன்னை பழிவாங்கத் தொடங்குவான்'' என சுவாங்க்சூ சொல்லியிருப்பார்.
கிரேக்க நாட்டில் சாக்ரடீசை விஷம் வைத்து கொன்றதைப் போன்ற அசிங்கங்கள் இந்தியா சீனா ஜப்பான் போன்ற கீழை நாடுகளில் நடந்ததில்லை. ஜெருசலேமில் இயேசு இப்படி தான் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். ஈரானில் கிராக்கத்தில் புத்திசாலிகளைக் கொன்றதைப் போல கீழை நாடுகளில் யாரும் கொல்லப்பட்டதில்லை. ஏனெனில் மிக புத்திசாலியாக நடந்து கொள்வது மிக ஆபத்தானது என இங்கே உணர்ந்திருந்தார்கள். முட்டாளைப் போல பைத்தியக்காரனைப் போல நடந்துக் கொள்ளுங்கள்.. இது தான் புத்திசாலித்தனத்தின் முதல்படியாகும்.
எந்த பைத்தியக்காரனும் தான் பைத்தியம் பிடித்தவன் என நினைப்பதில்லை. எப்பொழுது ஒரு பைத்தியக்காரன் தனக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என நினைக்கிறானோ அப்போதே அவனுடைய பைத்தியக்காரத்தனம் மறைந்து போகிறது. இனி அவன் பைத்தியமாக இருப்பதில்லை. புத்திசாலிகள் எந்த சுவடுகளையும் விட்டுச் செல்வதில்லை. ஏனெனில் அடுத்தவரை எப்போது பின்பற்றத் தொடங்குகிறாயோ அப்போதே அவன் போலியானவனாகிறான். ஒரு குரு கோணல் மாணலாக நடப்பதாக இருந்தால் நீங்கள் அவரைத் தவறவிட்டுவிடுவீர். வெகு சீக்கிரமே அல்லது சற்று தாமதமாகவோ நீங்கள் நீங்களாக இருக்க வேண்டுமென்பதை உணர்ந்து கொள்ளுவீர்கள். நீங்கள் யாரையும் பின்பற்ற முடியாது.
புத்திசாலி பார்ப்பதற்கு எல்லா வகையிலும் முட்டாளைப் போலவே காட்சியளிப்பான்.
மூலம் : The Empty Boat
வெற்று படகு
மூலம் : The Empty Boat
வெற்று படகு
#the_empty_boat
#OSHO
Video
Comments
Post a Comment