எளிமையான சுவாச பயிற்சி
எல்லா விதமான தியான முறைகளையும் உனக்கு சொல்லித் தர வேண்டிய அவசியம் இல்லை.
எளிதானதாகவும், எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் எளிமையானதாகவும் இருக்கும் ஒரு முறையை நான் தேர்ந்தெடுத்துள்ளேன்.
எப்போது எல்லாம் நீ அமைதியாக இருக்கின்றாயோ அந்த நேரங்களில் எல்லாம் நீ இந்த பயிற்சியை செய்யலாம் .
உதாணரமாக ரயிலில் பயணம் செய்யும் போது அல்லது பேருந்து,விமானம் பயணம் செய்யும் போது இந்த பயிற்சியை செய்யலாம். இடம் ஒரு பொருட்டு அல்ல .
காலம் – 2 நிமிடங்கள் முதல் எவ்வளவு நேரம் நீ செய்ய விரும்புகிறாயோ அது வரை.
1. உன் கண்களை மூடிகொள் , பிறகு உன் சுவாசத்தை கவனி . சுவாசம் உள்ளே செல்லும் போது நீயும் (உன் கவனம் )உள்ளே சென்று விடு,சுவாசம் வெளியே வரும் போது நீயும் (உன் கவனம் )வெளியே வா.
2.நீ சுவாசத்துடன் உள்ளே சென்று பின் அதனுடன் வெளியே வருவது என்பது போன்று செய்யும் சமயத்தில் நீ இரண்டு விஷயங்களைப் பற்றி உணர்வடைவாய்.
நீ சுவாசத்துடன் உள்ளே சென்ற பிறகு, சுவாசம் வெளியே வருவதற்க்கு முன் சுவாசத்தில் ஒரு கணம் இடைவெளி வரும்.
திரும்பவும் உள்ளே இழுக்கும் முன் ஒரு கணம் இடைவெளி வரும்.
நீ அதை கவனிக்க கவனிக்க இந்த இரண்டு இடைவெளிகளும் மேலும் மேலும் தெளிவாக, பெரியதாக ஆகிக்கொண்டு இருக்கும். தொடர்ந்து கவனி .
ஒரு சுவாசம் உள்ளே போய் ஒரு கணம் நிற்கும், பின் வெளி வரும்.
வெளியே வந்தது ஒரு கணம் நின்று பின் உள்ளே போகும்.
மிகச் சரியாக நாற்பத்தி எட்டு நிமிடங்கள் இந்த இடைவெளி வரும் என்பதை
10,000 வருடங்களுக்கு முன்பே கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த முறையை உபயோகித்த அத்தனை சாதகர்களாலும் மிகச் சரியாக இதே நேரம் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
அப்படி இடைவெளி வந்து விட்டால் நீ வீடு வந்து சேர்ந்து விடுவாய்.
அதை குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் செய்ய வேண்டும் என்று கிடையாது.
ஒரு நாளில் எவ்வளவு முறை முடிகிறதோ அவ்வளவு தடவை செய்யலாம்.
Comments
Post a Comment