Google

ஞானத்தை , பரவசத்தை விளக்கும் அற்புத கதை

ஞானத்தை , பரவசத்தை விளக்கும் அற்புத கதை <3 




ஒரு மாலைப்  பொழுது.

  ரபியா தன் குடிசைக்கு முன் வீதியில் எதையோ மும்முரமாக தேடிக்கொண்டிருந்தாள்.

சூரியன் மறைந்து கொண்டிருந்தது. மெதுமெதுவே இருட்டு சூழ்ந்து கொண்டிருந்தது.  சிலர் அவளைச் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

 அவர் பிரபலமான சூபி துறவி.  வயதான அந்தப் பெண்மணியை பார்த்து அவர்கள் கேட்டார்கள்.

 "என்னம்மா செய்யறீங்க ? எதைத்  தொலைச்சீங்க ? 
எதைத்  தேடி கிட்டு இருக்கீங்க ?"
அவர் சொன்னார் 
"என்னுடைய ஊசி தொலைந்து விட்டது"

மற்றவர்கள்  "சூரியன் மறையப் போகிறது ஊசியை கண்டுபிடிப்பது சிரமம். 
ஆனால் நாங்க வேணும்னா உங்களுக்கு உதவி செய்கிறோம் .
எங்கே போட்டீங்கன்னு மட்டும் சொல்லுங்க .வீதி அவ்வளவு பெருசு .ஊசியோ அவ்வளவு சிறுசு  .சரியா எங்கே போட்டிங்கன்னு சொன்னா தேடுறதுக்கு சௌகரியமா இருக்கும் "

ரபியா சொன்னார் ""அதை மட்டும் கேட்காம இருந்தா ரொம்ப நல்லா இருக்கும்.
 ஏன்னா அது வீதியிலேயே விழல்லே.
 எங்கேயோ வீட்டுக்குள்ளேயே விழுந்துச்சு "

அவர்கள் சிரிக்க ஆரம்பித்தார்கள் " கொஞ்சம் பேதலிச்சவங்கன்னு எப்பவும் தான் நினச்சிருந்தோம்.
 உள்ளே விழுந்த ஊசியை வீதியிலே ஏன் தேடறீங்க? "

ரபியா சொன்னார் . " சாதாரணமான ஒரு காரணம்தான் .உள்ளே வெளிச்சமே இல்லே . வெளியே கொஞ்சமாவது வெளிச்சம் இருக்குது ."

அவர்கள் மேலும் சிரித்துவிட்டுக்   கலைய ஆரம்பித்தார்கள்

ரபியா அவர்களை அழைத்து" கவனியுங்கள், நீங்க அதைத்தான் பண்ணிக்கிட்டு இருக்கீங்க .

உங்களைப் பார்த்துத் தான் நான் இப்படி செய்யறேன்.
 பேரானந்தத்தை வெளியே தேடிக்கிட்டு இருக்கீங்க .

முதலாவதும் அடிப்படையானதும் ஆன கேள்வியை கேக்காமத்தான் .
எங்கே அதை இழந்தீர்கள்?  கேட்டுக்கோங்க.
 அதை உள்ளே இழந்துட்டீங்க .
வெளியே தேடி கிட்டு இருக்கீங்க .

கேட்டா உணர்வுகள் எல்லாமும் வெளியேதான் பாத்துக்கிட்டு இருக்குதுங்கறீங்க.
 அங்கே கொஞ்சம் வெளிச்சமா இருக்குதுங்கற மாதிரி.

கண்கள் வெளியே பார்க்கின்றன.
 காதுகள் வெளியே இருப்பதை கேட்கின்றன .
கைகள் வெளியே நீட்டி இருக்கின்றன.
 அதுதான் காரணம் .

இல்லேனா கேட்டுக்குங்க ,வெளியே நீங்கள்  தொலைக்கவில்லை .
என் சொந்த அனுபவத்தின் பேரிலே சொல்றேன் .

பலநூறு பிறப்புகள்ளே நான் வெளியே தேடித்தேடி இளைச்சுட்டேன் .
ஆனால் உள்ளே பார்த்தப்போ எனக்குப்  பெரு வியப்பு.

 தேடவேண்டியதே இல்ல.  அலைபாய வேண்டியதில்லே ..அது அங்கே தான் எப்பவும் இருந்துகிட்டிருந்திருக்கு.

பேரின்பம் உன்னுடைய ஆழ்நிலை .
இன்பத்தை பிறரிடமிருந்து யாசித்துப் பெற வேண்டி இருக்கிறது.
 எனவே அவர்களைச்  சார்ந்து இருக்கிறாய்.
 பேரின்பம் உங்களை ஆண்டான் ஆக்குகிறது.

 பேரின்பம் ஒரு நிகழ்வல்ல அது எப்போதைக்கெப்போதும் இருப்பது.

 வெளியே பார்ப்பதை நிறுத்தி விடு .உள்ளே பார்.
 உள்ளே திரும்பு .
உன்னுடைய அகத் தளத்தில் தேடு .

உன்னுடைய இருப்பில் தேடு.
 பேரின்பம் தேடிக் கண்டுபிடிக்கும் ஒரு பொருளல்ல.

 அது உன்னுடைய பிரக்ஞை.

Comments