Google

கவனம் என்னும் மந்திர சாவி - OSHO



கவனம் என்னும் மந்திர சாவி

உங்களால் மனம் செய்யும் லீலைகளை

வெறுமனே கவனிக்க முடிந்தால் .

நல்லது கெட்டது என்கிற முத்திரை குத்தாமல்

வெறுமனே கவனிக்க முடியுமானால் ,

ஒரு திரைப்படத்தை காண்பது போல்

மனதை கவனித்துக் கொண்டே இருக்க

முடியுமானால் மனம் மரணித்து விடும் .

மனம் அடிபணிந்து விடும் .

ஒரு நல்ல வேலைக்கரானாய் மாறி விடும் .

வாழ்க்கை என்னும் ரதத்தில் மனதை

அரியணையில் ஏற்றக் கூடாது .

இப்போது மனம் அரியணையில் ஏறி

நம்மை அதன் இஷ்டத்திற்கு ஆட்சி செய்கிறது .

இதற்கு காரணம் என்ன

நம் விழிப்புணர்வு இன்மையே .

நம் கவனம் இன்மையே .

மீண்டும் கவனம் என்னும் ஆயுதம் ஏந்துங்கள் .

மனம் அடிபணிந்து விடும்.

மனதின் ஆட்டம் மரித்து விடும் .

இருப்பாகிய நாம் ஆட்சி செய்ய தொடங்கி விடுவோம்.

அப்போது உங்கள் விருப்பம் என்னவோ அப்படியே

வாழும் திறமை உங்களுக்கு வந்து விடும் .

ஆனந்தமாக , மகிழ்ச்சியாக வாழ வேறு என்ன தடை

மனதை தவிர .

Comments