பிறர் மீது பொறுப்பு சுமத்தாதே. - OSHO
*தம்மபதம்*
பிறர் மீது பொறுப்பு சுமத்தாதே. அதுதான் உன்னைத் துயரத்திலேயே வைத்திருக்கிறது. பொறுப்பை ஏற்றுக் கொள். "நானே என் வாழ்வுக்குப் பொறுப்பு. வேறு யாரும் பொறுப்பல்ல. எனவே எனக்குத் துயரம் என்றால் எனக்குள்ளேயே காரணத்தைத் தேடவேண்டும். என்னவோ தவறாக இருக்கிறது. எனவேதான் என்னைச் சுற்றிலும் துயரம் நிலவ விட்டிருக்கிறேன்." என்று சதா நினைத்துக் கொண்டிரு.
பிரக்ஞை என்பது எந்த ஒரு காரியத்தையும் புதிய சுவை கூட்டிச் செய்வது. அதைச் செய்வதால் மட்டும் பிரக்ஞை இருக்கிறது என்று பொருளல்ல. ஆனால் உனக்குள்ளே ஒரு சாட்சி பார்த்திருக்க நீ அதைச் செய்வதில்தான் பிரக்ஞை இருக்கிறது. கவனித்துக் கொண்டு, பார்த்துக் கொண்டு, நீ அதைச் செய்து கொண்டிருக்கிறாய் என்பதைத் தெரிந்துக் கொண்டு ஒரு சாட்சி உனக்குள்ளே இருக்கும்போது அதுதான் பிரக்ஞை. அபபோதுதான் மறுபிறப்பு நிகழ்கிறது.
ஓஷோ.
Comments
Post a Comment