#கேள்வி : ஓஷோ , நான் ஏகப்பட்ட தவறுகள் செய்கிறேன்...
#கேள்வி : ஓஷோ , நான் ஏகப்பட்ட தவறுகள் செய்கிறேன் இது எனக்குக் கவலையை அளிக்கிறது . இதை நான் எப்படி போக்குவது ?
#பதில் : " உண்மையை அறியும் புதுமைத் தேடுதலில் ஒருவன் ஏகப்பட்ட தவறுகளையும் , தடுக்கி விழுதல்களையும் எதிர்பார்த்தே நடக்க வேண்டும் . ஏகப்பட்ட அபாயங்களைச் சந்திக்க வேண்டிவரும் . அவன் வழி தவறிகூட போகக்கூடும் . ஆனால் அவன் அப்படித்தான் சென்று அதை அடைய வேண்டும் . இப்படி வழி தவறிச் செல்லுவதால் , பின்பு எப்படி , அப்படி வழி தவறிச் செல்லக்கூடாது என்பது அவனுக்குப் புரிய ஆரம்பிக்கிறது . அதனால் அவன் மெல்ல மெல்ல உண்மையை நெருங்கிவருகிறான் . இது ஒரு தனி நபர் முயற்சி , தனி யாத்திரை . இதில் நீங்கள் அடுத்தவர்களது முடிவில் , முடிவு எடுக்கக் கூடாது . " ..........
-Osho
Comments
Post a Comment