ஒரு துறவி தன் சீடர்களிடம் ‘கோபமாக நாம் இருக்கும்போது நாம் ஏன் கத்துகிறோம்..???’ என்று கேட்டாரம். - OSHO
ஒரு துறவி தன் சீடர்களிடம்
‘கோபமாக நாம் இருக்கும்போது நாம் ஏன் கத்துகிறோம்..???’ என்று கேட்டாரம்.
அவரது சீடர்கள்
‘அமைதியை இழந்து விடுவதால்தான் கத்துகிறோம்’ என்றார்களாம்.
அந்தத் துறவி,
‘கேள்வி அதல்ல
கோபமாக இருக்கும்போது நாம் கோபம் கொள்பவர் அருகிலேயே இருந்தாலும் ஏன் கத்துகிறோம்..???
மென்மையான குரலில் பேசினால் அவருக்குக் கேட்காதா.???’
என்று கேட்டாராம்
சீடர்கள் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கவே துறவி மீண்டும் தொடர்ந்தாராம்
“ ஒருவர் மீது மற்றவர் கோபப்படும்போது
இருவரது இதயங்களிலும் அகங்காரம் தலை தூக்குவதால்
அவர்கள் மனதளவில் தொலைதூரம் விலகிப்போய் விடுகிறார்கள்
அதனால்தான் கத்திப் பேசுகிறார்கள்
ஆனால் ஒருத்தரை மற்றவர் நேசிக்கும்போது
அங்கே அகந்தை அற்றுப்போய் இதயங்கள் நெருங்கிப்போகின்றன
அதனால் மென்மையாகவே அவர்களால் பேச முடிகிறது
தன்னலமற்ற அன்பில் அகந்தை முழுவதுமாய்க் கரைந்து காணாமல் போகிறது”
- ஓஷோ
Comments
Post a Comment