Google

#கேள்வி : ஓஷோ , உங்கள் ஆசிரமத்தில் பெண்களையும் சேர்த்துக்கொள்வது ஏன் ?




**********‪#‎ஓஷோ‬#*********
**************‪#‎கேள்வி‬ பதில்#***********
#கேள்வி : ஓஷோ , உங்கள் ஆசிரமத்தில் பெண்களையும் சேர்த்துக்கொள்வது ஏன் ?
‪#‎பதில்‬ : " பெண்கள் தனக்கே உரித்தான சில சிறப்பான குணங்களைப் பெற்றுத் திகழ்கிறார்கள் . பல நேரங்களில் , சின்னச்சின்ன விஷயங்கள்கூட அவர்களைத் திருப்திப்படுத்த போதுமானதாக இருக்கிறது . அவர்கள் எளிதில் அமைதி அடைகின்றனர் . இதற்கு முக்கியக்காரணம் குழந்தைப் படைப்பாற்றலை இயற்கை அவர்களுக்கு அளித்திருக்கிறது . தாய்மை , இயற்கை பெண்களுக்கு அளித்த கொடை .....அதில் அவள் மிகுந்த திருப்தி அடைகிறாள் .
இந்த ஒரு விஷயத்தில் ஆண்களின் நிலை மிகவும் பரிதாபகரமானது . இந்த வெளிஉலகத்தில் பெண்களைவிட ஆண்களே சிறந்த படைப்பாற்றல் உடையவராக இருக்கிறார்கள் . இதற்கு முக்கியக் காரணம் குழந்தை என்னும் மாபெரும் படைப்பாற்றலை அவர்களுக்கு அளிக்கவில்லை ! அதை ஈடுகட்டவே இவர்கள் வெளியில் புதுமையைப் படைக்கிறார்கள் . ஆனால் அவையெல்லாம் அந்த இயற்கை படைப்பாற்றலுக்கு ஈடாகாது . இந்தக் குறை அவனது ஆழ்மனதில் இருந்து கொண்டேதான் இருக்கும் .
ஆகவே , பெண்கள் உடல் மற்றும் மன ரீதியாக சமநிலை பெற்று ( Biologically Balanced ) திகழ்கின்றனர் .
புத்தர் பெண்களுக்கு எதிராக இருந்தார் . ஆனால் பிறகு மிகுந்த தயக்கத்தோடு சில பெண்களைச் சீடர்களாக ஏற்றுக்கொண்டார் . அதனால் பின்பு அவர் , ' 5000 ஆண்டுகள் சிறப்பாக இருக்கவேண்டிய மதம் , பெண்களைச் சேர்த்துக் கொண்டதன் விளைவாக 500 ஆண்டுகளில் அழியப்போகிறதே ' என்று ஆதங்கப்பட்டார் . அப்படியேதான் நடந்தது ! புத்தர் இறந்தபிறகு அவரது உடலை அப்புறப்படுத்துவதற்கு முன்பே அவரது சீடர்கள் 33 சிறுசிறு குழுக்களாகப் பிரிந்துவிட்டனர் ! அதுபோலத்தான் ஏசுவின் வாழ்விலும் நடந்தது . ஆனால் இது அந்த அளவுக்கு மோசம் இல்லை . ஏசுவை சிலுவையில் அறைந்தபிறகு , எல்லோரும் சென்றுவிட்டபிறகு , அவரது உடலை இறக்கி காப்பாற்றியது மூன்று பெண்கள் . அவரது தாயார் மேரி , மகதலேனா என்ற விலைமாது , மார்க்கா என்ற அவளது தங்கை . இது இருக்கட்டும் .
என்னுடைய ஆசிரமத்தில் பெண்களிடம் நிறைய பொறுப்புகளைக் கொடுத்திருக்கிறேன் . இதற்கு முக்கியக்காரணம் எதார்த்தத்தையொட்டி நடைமுறைச் சிக்கலை உணர்ந்து செயல்படுபவர் . இந்த உலகம் முழுவதையுமே பெண்களின் பொறுப்பில் விட்டுவிட்டால் போரே இருக்காது ! கடந்த 3000 ஆண்டுகளில் 5000 போர்கள் நடந்திருக்கின்றன !
ஆகவே , பெண்கள் வாழ்க்கையின் ஆணிவேர் . ஆனால் பழங்காலத்தில் இதில் நடைமுறைச் சிக்கல்கள் பல இருந்தன . ஆனால் இப்பொழுது அப்படி இல்லை . வருங்காலம் பெண்களுக்குரியதுதான் . இதில் சந்தேகமே இல்லை . ஆண் , இன விருத்திக்கு மாத்திரம்தான் உபயோகப்படுவான் !" ......

Comments