Google

தந்த்ரா ரகசியங்கள் பகுதி - 5




தந்த்ரா ரகசியங்கள் பகுதி - 5

உண்மையறிவு என்பது உனக்கு நிகழ்ந்ததாக இருக்கும்

அதைப் பற்றி விவரம் சேகரித்ததல்ல, படித்ததல்ல, கேள்விப்பட்டதல்ல
அது உன்னுடைய சொந்த அனுபவம்

அப்போது அங்கே எந்த கேள்வியும் இல்லை

ஏனெனில் அதன்பின் நீ அதற்கு எதிராக எதுவும் செய்ய முடியாது

நீ அதற்கு எதிராக போகாமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும் என்பதல்ல

உன்னால் அதற்கு எதிராகப் போக முடியாது
.
எப்படி முடியும்....???

சுவர் இருக்கிறதென்று எனக்குத் தெரியும்போது

அறையைவிட்டு வெளியேற முயற்சிக்கும் நான்

எப்படி சுவர் வழியாக செல்வேன்...???

அது சுவர் என்று எனக்கு தெரியும்,

எனவே கதவு எங்கே என்றுதானே தேடுவேன்.

குருடன்தான் சுவரின் வழியே வெளியேற முயற்சி செய்வான்

எனக்கு கண்கள் இருக்கின்றன

சுவர் எது கதவு எது என எனக்குத் தெரிகிறது.
.
ஆனால் சுவரின் வழியே வெளியேற முயற்சி செய்து விட்டு,

“கதவு" எங்கே இருக்கிறதென்று எனக்குத் தெரியும்

இது சுவர் என்றும் எனக்குத் தெரியும்.

இருப்பினும் சுவரின் வழியாகவே எப்போதும் வெளியேற முயற்சிப்பதை நான் எங்ஙனம்
நிறுத்துவது..???” எனக் கேட்டால் என்ன பொருள்...???
.
மற்றவர்கள் அது கதவு எனக் கூறினாலும்

உன்னைப் பொறுத்தவரை அது பொய்,

இது சுவரல்ல, கதவு,

அதன் வழியே வெளியேறலாம் என நீ நினைக்கிறாய்,

என்றுதானே பொருள்

அதனால்தானே நீ முயற்சிக்கிறாய்...???
.
இது போன்ற சூழலில்

உண்மையறிவுக்கும் தகவலறிவுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை தெளிவாக பார்க்கலாம்.

தகவலைப் பிடித்து தொங்காதே.

மிகச் சிறந்த இடத்திலிருந்து வந்திருந்தால் கூட

தகவல் தகவல்தான்

புத்தர் சொன்னால் கூட அது உன்னுடைய சொந்த அனுபவமல்ல

அது உனக்கு எந்த வகையிலும் உதவாது

அது உன்னுடைய சொந்த அறிவென்று நீ நினைத்துக் கொண்டே இருக்கலாம்

ஆனால் இந்த தவறான புரிதல் உன்னுடைய நேரத்தையும் காலத்தையும் வாழ்க்கையையும் வீணடிக்கும் <3

- ஓஷோ 

Comments