Google

புத்தராக இரு - OSHO




தம்ம பதம்-III
---------------
புத்தராக இரு  
----------------
புத்தராக இருப்பது என்பது விழித்திருப்பது

தன்னைத் தவிர்த்த இன்னொன்றைத் தெரிந்து கொள்வதுதான் அறிவு

ஞானம் என்பது தன்னைப் பற்றிய அறிவு

தெரிந்து கொள்கிறவனைப் பற்றி தெரிந்து கொள்வதுதான் ஞானம் விவேகம்

தெரிந்து கொள்பவனும் தெரிந்து கொள்ளப் படுவதும் இல்லாமல் போவதுதான் புத்த நிலை

தியானம் ஒரு ரச வாதம்

கவனித்துப் பார்க்கும் போது

இரும்பைத் தங்கமாக்கி விடும்
சாதாரணத்தில்

அசாதாரணத்தைக் காண்பதுதான் புத்தருடைய பாதை

இந்தக் கணத்தில் இங்கிருப்பதில் முழுமையைக் காண்பது

இதைத்தான் புத்தர்
" தத்ஹதா " என்கிறார்

மனம் எதற்கெடுத்தாலும் வடிவம் கற்பித்துக் கொண்டே இருக்கும்

கடவுள் வடிவத்தோடு கூடியதொரு பொருளல்ல

" தேவைகள் ஏதும் இல்லாதவனாக இரு

எங்கே ஆசைகள் இருக்கிறதோ அங்கே மௌனித்து விடு "

மனம் ஆசைப்பட்டுக்
கொண்டே இருக்கிறது

மனம் உன்னை திருப்தியாக இருப்பதற்கு விடவே விடாது

புத்தர் கூறுகிறார்
" தேவைகள் ஏதும் இல்லாதவனாக இரு"

இப்போது என்ன இருக்கிறதோ

அது உன் தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது

இப்போது இருப்பவை எல்லாம் அழகாகவும் அருமையாகவும் இருக்கிறது

அந்த அழகை அனுபவி

இயற்கை இப்போது இருக்கிறது
என்பதில் வெகு அழகு இருக்கிறது

ஆசையை கவனமாக வேடிக்கை பார்க்கும்போது

ஆசை மெதுவாக விலகி விடுகிறது

" மகிழ்ச்சியோ துயரமோ

எது நடந்தாலும்

பாதிப்பில்லாதவனாக

பற்றில்லாதவனாக

போய்க் கொண்டிரு"

மகிழ்ச்சியையும் துயரத்தையும் உன்னோடு அடையாளப்படுத்திக் கொள்ளாதே

அதை மிகவும் ஆழமாக வேடிக்கை பார்

இதைத்தான் புத்தர்

" விபாசனா" என்கிறார்

ஆழ்ந்து பார்ப்பது அகக் கண் கொண்டு பார்ப்பது

புத்தர் அவரது உடலை வேடிக்கைப் பார்க்கிறார்

அவருக்கு உடல் வலியில்லை

தான் தனது உடல் அல்ல என்பது அவருக்கு தெரிந்து இருக்கிறது

உடல் இறக்கும் போது கூட புத்தர் அதை வேடிக்கை பார்க்கிறார்

அந்த அளவுக்கு வேடிக்கை பார்க்க முடியும் என்றால்

ஒருவர் இறப்பைத் தாண்டியவராகிப் போகிறார்

இறப்பிலிருந்து உன்னை காப்பாற்றுவதல்ல புத்தருடைய நோக்கம்

இறப்பைத் தாண்டி உன்னைக் கொண்டு போவதுதான் அவருடைய நோக்கம்

மனிதனுடைய முழு முயற்சியும் மரணத்தால் அழிக்க முடியாதது எது என்பதைத் தெரிந்து கொள்வதுதான்

மரணமில்லாதது எதுவோ

அதைத் தன் மையமாக கொண்டிருப்பது தான் பிறப்பு

ஏற்கனவே நடந்து விட்டது

அதைப் பற்றி இப்போது எதுவும் செய்ய முடியாது

ஆனால் மரணம் நடக்க வேண்டி இருக்கிறது

அதைப்பற்றி ஏதாவது செய்யமுடியும்

உணர்வோடு இறக்க முடியும்
என்றால்

மீண்டும் உணர்வோடு பிறக்கலாம்

கணத்துக்கு கணம்
விழித்திருப்பதுதான்
புத்தரின் நெறி

அப்போது உனக்குள் மரணத்தைத் தாண்டிய ஏதோ ஒன்று இருப்பதைக் காண்பாய்

அதை அழித்து விட முடியாது.

- ஓஷோ 

Comments

  1. உண்மை யான கருத்துக்கள் சிந்தனையை தூண்டும் வகையில் இருக்கிறது ஆழமாக.

    ReplyDelete

Post a Comment