என்னைப் பின்பற்றுங்கள் , கவலையற்று இருங்கள் என்று ஒருசில மதங்கள் கூறுகிறதே , இது சரியா ? - OSHO
#கேள்வி : ஓஷோ , ' என்னைப் பின்பற்றுங்கள் , கவலையற்று இருங்கள் . நான் உங்களைச் சுமக்கிறேன் ' என்று ஒருசில மதங்கள் கூறுகிறதே , இது சரியா ?
#பதில் : " முட்டாள்கள் , சுய சிந்தையற்றவர்கள்தான் ஒருவரை ஆட்டு மந்தையைப் போல பின்பற்றுவார்கள் .
புத்திசாலிகள் தங்களுடைய வழிகளைத் தாங்களே ஏற்படுத்திக் கொள்வார்கள் .
நீங்கள் என்னோடு இங்கு இருந்தால் அது இரண்டு வழிகளில் இருக்கலாம் .
ஒன்று நீங்கள் உங்கள் புத்திசாலித்தனத்தோடு இருக்கலாம் .
அப்பொழுது என்னிடமிருந்து நீங்கள் கற்றுக் கொள்ளலாம் .
ஆனால் , நீங்கள் என்னைப் பின்பற்றமாட்டீர்கள் . நீங்கள் உங்கள் புத்திசாலித்தனத்தின்படியேதான் செல்லுவீர்கள் .
ஆனால் , நீங்கள் ஒரு முட்டாளாக இருந்தால் , நீங்கள் என்னிடமிருந்து கற்றுக் கொள்ளுவதைப் பற்றி அக்கறை காட்ட மாட்டீர்கள் .
நீங்கள் என்னை வெறுமனே பின்பற்றுவீர்கள் .
இது மிகவும் எளிதானது . ஆபத்து குறைந்தது . அதிக பாதுகாப்பு கொண்டது . ஏனென்றால் உங்கள் பொறுப்பை எப்பொழுதும் என்மேல் சுலபமாகச் சுமத்திவிடுவீர்கள் .
ஆனால் , இது இறப்புக்குச் சமம்தான் ; வாழ்வுக்கு அல்ல .
வாழ்வு அபாயகரமானதுதான் . புத்திசாலிகள் ஆபத்தைத்தான் தேர்ந்தெடுப்பார்கள் .
ஏனென்றால் அங்குதான் உண்மையான வாழ்வு இருக்கிறது .
' என்னைப் பின்பற்றுங்கள் . என் மடியில் இளைப்பாறுங்கள் . கவலையை விடுங்கள் ' என்று சொன்னது ஒரு படிப்பறிவு இல்லாத முட்டாள் கூட்டத்துக்குத் தானே ஒழிய , புத்திசாலிகளுக்கும் , சுயசிந்தனை உள்ளவர்களுக்கும் அல்ல .
ஜீசஸ் போதித்தது படிப்பறிவில்லாத எளிமையான மக்களுக்குத்தான் ; உங்களுக்கு அல்ல !
Comments
Post a Comment