கிரேக்க ஞானி டியோயெனிஸ் நிர்வாணமாகவே அலைந்தவர். - OSHO
கிரேக்க ஞானி டியோயெனிஸ் ஒரு காட்டு வழியில் திருடர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார். அவர் நிர்வாணமாகவே அலைந்தவர்.
அவரது எழிலான உடலைப் பார்த்து மாமன்னர் அலெக்சாண்டரே பேராசை கொண்டிருக்கிறார். அவர் தியானம் செய்து கொண்டிருந்தபோதுதான் திருடர்களால் பிடிக்கப்பட்டார்.
அவரது ஆரோக்கியமான அழகான உடலைப் பார்த்தால் அடிமைகள் சந்தையில் நல்ல விலை கிடைக்கும் என்று திருடர்கள் நினைத்தனர்.
ஆனால்,
அவரது உடல்வலிமையைப் பார்த்து அருகே வருவதற்குத் தயங்கினர்.
அவர்கள் ஆறு பேர். ஆனாலும் ஞானியைப் பார்த்து அவர்களுக்கு அச்சம்.
நிர்வாணியாக இருந்த டியோயெனஸை அவர்கள் ஆபத்தானவராக என்று நினைத்தனர்.
“ஏன் பயப்படுகிறீர்கள். நான் உங்களுடன் எந்தச் சண்டைக்கும் தயாராக இல்லை. நீங்கள் வரலாம்.”
என்றார் டியோயெனிஸ். அவர்கள் அவரைச் சங்கிலியால் கட்டிப்
பூட்டினர்.
அவரை அடிமைகள் விற்கப்படும் சந்தைக்கு அழைத்துச் சென்றனர்.
அவர்கள் செல்லும் வழியில், “ ஏன் உங்களுக்கு இத்தனை சிரமம்? என்னை அழைத்தாலே போதும்.
நான் உங்களுடன் வந்திருப்பேனே! எதற்கு இந்தச் சங்கிலியெல்லாம்,” என்று அவர்களிடம் நட்புடன் கேட்டார்.
அடிமையாகச் செல்வதற்கு யார்தான் விரும்புவார்கள்? என்று திருடர் தலைவன் கேட்டான்.
டியோயெனிஸோ சிரித்துக் கொண்டே, “ஏனெனில், நான் விடுதலையான மனிதன். அதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலை கிடையாது” என்றார். திருடர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.
சந்தையில் நிறுத்தப்பட்டார் டியோயெனிஸ். “ எஜமான் ஒருவன் விற்கப்படுவதற்காக இங்கே வந்திருக்கிறான். அவனை வாங்குவதற்கு அடிமைகள் யாராவது இருக்கிறீர்களா?” என்று கூச்சலிட்டார்.
எஜமான் என்பவர் எஜமான்தான். உண்மையான விடுதலை என்பது கட்டுகளுக்கு எதிரானது அல்ல.
கட்டுகளுக்கும் அப்பாற்பட்டது.
உங்களது விடுதலை என்பது கட்டுகளுக்கு எதிரானதெனில் அது விடுதலையே அல்ல.
சந்தைப் பகுதியைப் பார்த்து அச்சப்பட்டு, மனைவி, குழந்தைகளைப் பார்த்து அச்சப்பட்டு இமாலயத்துக்குத் தப்பிச் செல்லலாம்.
அதனாலேயே நீ விடுதலை பெற்றவன் அல்ல. அங்கே உனது பந்தங்கள் வந்துவிட்டால், அவர்களைப் பார்த்து நடுங்குவாய்.
உனது அச்சம் உடனடியாக இமாலயத்திலும் உன்னைப் பற்றும்.
Comments
Post a Comment