Google

மனிதனின் ஆணவம் தனக்கு மேல் எது இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளாது -OSHO




 மனிதனின் ஆணவம் தனக்கு மேல் எது இருந்தாலும்

அதை ஏற்றுக் கொள்ளாது

தான்தான் உயர்ந்தவன் தன்னை விட உயர்ந்தது ஏதும் இல்லை என்று அவன் நம்புகிறான்

இது அவனுக்கு ஒரு சந்தோஷத்தைக் கொடுக்கிறது

தன்னுடைய சொந்த விழிப்புணர்வை மறப்பதால் சந்தோஷம் அடைகிறான்

விழிப்புணர்வு என்பது என்றும் அழியாதது

அதற்கு மரணம் என்பது தெரியாது

விழிப்புணர்வு இல்லாதது தான்
மரணம் அடைகிறது

நீங்கள் உண்மையிலேயே இந்த பிறப்பு இறப்பு சக்கரத்தை விட்டு வெளியேற விரும்பினால்

நீங்கள் முற்றிலும் விழிப்புணர்வு உள்ளவராக ஆக வேண்டும்

தத்துவ ரீதியாக நீங்கள் ஒப்புக் கொள்வதால் எந்தப் பயனும் இல்லை

இந்த விஷயங்கள் உங்கள் இருப்பு நிலையாக மாற வேண்டும்

நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் கவனியுங்கள்

உங்கள் மனதில் கடந்து செல்கின்ற ஒவ்வொரு எண்ணத்தையும் கவனியுங்கள்

உங்களுடைய
நடத்தல் பேசுதல்
சாப்பிடுதல் குளித்தல்
இவைகளைக் கவனியுங்கள்

உங்கள் வாழ்க்கையில் இடைவிடாமல் நிறை கவனத்தை கொண்டு வாருங்கள்

நீங்கள் கவனிக்கும்போது ஒரு தெளிவு பிறக்கும்

பேசிக் கொண்டே இருந்த மனம் பேச்சைக் குறைத்து விடும்

பேச்சாக இருந்த அந்த சக்தி நிறை கவனமாக மாறி விடும்

உங்கள் எண்ணங்களுக்கும்
சக்தி இல்லாமல் போய் விடும்

இப்போது நிறை கவனம் தான் வாழ்வு என்பதை ஒருவர் கண்டு கொள்கிறார்

நிறை கவனத்தை ஒரு போதும் அழிக்க முடியாது

அப்போது மரணம் வரும்போது கூட நீங்கள் அதைக் கவனிக்க முடியும்

உடல் மறைந்து விடும் ஆனால் நிறை கவனமாகிய விழிப்புணர்விற்கு மரணம் கிடையாது

அது இந்த பிரபஞ்ச முழுமையின் ஒரு பகுதியாகி விடும்

அது இந்த பிரபஞ்ச தன்னுணர்வாகி விடும்

இதைத் தான் உபநிஷத ஞானிகள்
*அகம் பிரம்மாஸ்மி* என்றனர்

இதைத்தான் அல் ஹிலாஜ் மன்சூர்
*அனல் ஹக்* நானே சத்தியம் என்றார்

<3 ஓஷோ <3

Comments