Google

#கேள்வி : - ஓஷோ , நீங்கள் ஏன் தியானத்தை ஒரு " இறக்கும் கலை " என்று அழைக்கிறீர்கள் . - OSHO




#கேள்வி : - ஓஷோ , நீங்கள் ஏன் தியானத்தை ஒரு " இறக்கும் கலை " என்று அழைக்கிறீர்கள் . அதை ஏன் ' வாழும் கலை ' என்று சொல்லக்கூடாது ?

#பதில் : - " நான் அப்படி அதை ' வாழும்கலை ' என்று சொன்னால் . உங்கள் அகங்கார மனம் திருப்தியடையும் என்று கருதித்தான் . அப்படி இறக்கும்கலை. என்று குறிப்பிட்டேன் .
ஒரு நிகழ்ச்சி ......

ஒரு பெரிய தலைப்பாகை அணிந்த ஒரு யூதப்பாதிரியார் ஒரு கிணற்றில் தவறுதலாக விழுந்து , ' உதவி , உதவி ' என்று கத்தினார் . மக்கள் மேலே கூடி நின்று வேடிக்கை பார்த்தார்கள் . அப்பொழுது ஒருவர் தன் கையை உள்ளே நீட்டி , ' உங்கள் கையைக் கொடுங்கள் ' என்று கேட்டார் . ஆனால் அவர் அதைக் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை . மீண்டும் மீண்டும் ' உதவி , உதவி ' என்று கத்திக்கொண்டு இருந்தார் .

கடைசியில் முல்லா நசுருதீன் அங்கு வந்து , எட்டிப்பார்த்து , ' என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள் ' என்றார் . உடனே அந்தப் பாதிரியார் அவர் கையை ' கப் ' பென்று பிடித்துக்கொண்டார் ! பிறகு அவரை மெல்ல இழுத்துக் காப்பாற்றினார்கள் .

அப்பொழுது ஒருவர் முல்லாவிடம் , ' நீங்கள் மட்டும் எப்படி அவரைக் காப்பாற்றினீர்கள் ? என்று கேட்டார் . அதற்கு முல்லா , ' அது வேறு ஒன்றுமில்லை . ' கொடுங்கள் ' என்ற வார்த்தையைக் கேட்டால் , கஞ்சன்கள் எதையுமே கொடுக்க மாட்டார்கள் ! நான் என் கையை நீட்டி ' பிடித்துக்கொள்ளுங்கள் ' என்று கூறினேன் . அதுதான் காரணம் ! ' என்றார் .

நான் தியானத்தை வாழும் கலை என்று சொன்னால் , உங்கள் மனம் , ' ஆமாம் , நாம் செய்வது சரிதான் . நான் வளர்ந்து மிக நல்ல நிலைக்கு வருவேன் ' என்று கூறும் . ஆனால் தியானம் செய்வது உண்மையில் உங்கள் மனம் இறக்கும் வேலைதான் ! மனம் என்றாலே அகங்காரம்தான் , பொய்தான் . அதை அழிப்பதுதான் தியானத்தின் குறிக்கோள் . உங்கள் அகங்காரம் , உங்கள் தன்முனைப்பு , உங்கள் அவலட்சணங்கள் வளர்ந்தால் , அது உங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் கழுத்தை இறுக்கிவிடும் . உங்களைச் சுற்றி ஒரு சிறையை உண்டாக்கிவிடும் . எது உங்களுக்கு முதலில் இன்பமாக இருந்ததோ , அதுவே பிறகு உங்களுக்கு நரகமாகி விடும் .

ஆகவே , தியானம் என்பது உங்கள் அகங்காரத்தின் மரணம்தான் ! ' ..............

Comments