Google

மனிதனைத் தவிர மற்ற உயிரினங்கள் எல்லாம் இறுக்கமற்று எப்பொழுதும் ஆனந்தமாக இருப்பதுபோலவே தோன்றுகிறதே - OSHO




❓கேள்வி : - ஓஷோ , மனிதனைத் தவிர மற்ற உயிரினங்கள் எல்லாம் இறுக்கமற்று எப்பொழுதும் ஆனந்தமாக இருப்பதுபோலவே தோன்றுகிறதே .

அப்படி இருக்கும்பொழுது ,

மனிதப்பிறவி மிக உயர்ந்த பிறவி என்று எப்படிக் கூறுகிறீர்கள்......❓

❗பதில் : - " பறவைகள் மிக ஆனந்தமாகப் பாடுகின்றன

ஆனால்

அவை பிரக்ஞையாக தெரிந்தா செய்கின்றன....???

ஏதோ ஒரு உணர்வில் காலையில் பாடுகின்றன 

இல்லை சப்தம் இடுகின்றன

அது , அதற்கு ஆனந்தமாக இருக்கிறதோ இல்லையோ

நமக்கு ஆனந்தமாக இருக்கிறது

அவற்றுக்கு இறுக்கம் இல்லை என்று கூறுகிறீர்கள் 

அவற்றுக்கும் இறுக்கம் உண்டு

அது உணவு தேடும்பொழுதும்

தன் இனத்தை தேடும்பொழுதும்

போட்டியில் அவைகளுக்கு இறுக்கம் ஏற்படுகிறது 

ஆனால் அது இயல்பானது

அது உடலையோ அல்லது உள்ளத்தையோ பாதிப்பதில்லை

ஆனால்

மனிதனுக்கு இவை இரண்டைத்தவிர

வேறு பலவற்றில் இறுக்கம் இருக்கிறதே

மனிதனைத்தவிர மற்றவை செயலாற்றுவது இயந்திரத்தனமானது

அதாவது இயற்கையே அப்படி ஒரு பிரக்ஞையற்ற நிலையை அதற்குள் ஏற்படுத்தி வைத்திருக்கிறது

அவற்றுடைய சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டது

ஆனால் மனிதனுக்கு இயற்கை சுதந்திரத்தை மிகுந்த அளவில் கொடுத்திருக்கிறது

பகுத்தறியும் திறனைக் கொடுத்திருக்கிறது

இதுதான் பிரச்சனையே

காரணம் அவனுடைய பேராசை மற்றும் மிகுந்த எதிர்பார்ப்பு

இதுதான் முக்கியமாக அவனுடைய மன இறுக்கத்திற்கு காரணம்

சுதந்திரம் என்றால் என்ன தெரியுமா....???

'பொறுப்பு' என்று அர்த்தம் 

பொறுப்பற்றவனிடம் , சிந்திக்கும் செயலற்றவனிடம் சுதந்திரத்தைக் கொடுத்தால் என்ன ஆகும்....???

அதுதான் இந்த உலகத்தில் நடந்துகொண்டிருக்கிறது

100 - க்கு 90 லிருந்து 95 சதவிகிதம் மனிதர்கள்

தன்னுடைய பொறுப்பு என்ன என்பதையே அறியாமல் இருக்கிறார்கள்

சுதந்திரம் எப்பொழுது அர்த்தமுடையதாக ஆகிறது என்றால்

அவன் பிரக்ஞையோடு செயல்படும்போதுதான்

ஒருவன் பிரக்ஞையோடு செயல்படும்பொழுதுதான் இறுக்கம் ஏற்படுகிறது

ஆனால் ஒருவன் எளிமையாக

எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல்

இயற்கையாக வாழ்ந்தால்

ஏது இறுக்கம்.....???

அதற்கு மனிதனைவிட மற்றவை உயர்ந்தது என்று நீங்கள் எப்படி நினைக்கலாம்....???

அவற்றுக்கு மனம் கிடையாது 

அதனால் இறுக்கம் கிடையாது

மேலோட்டமாக அவை ஞானமடைந்தது போல தெரியும்

அது இயல்பானது

அது அவை முயற்சியாக அடைந்தது இல்லை ❗

❓கேள்வி : - ஓஷோ , ஜெ . கிருஷ்ணமூர்த்தி ' தியானம் தேவையில்லை ' என்று கூறுகிறார்

ஆனால் நீங்கள் தியானத்தையே வற்புறுத்துகிறீர்கள்

இது என்ன முரண்பாடு....❓

❗பதில் : - " அது உண்மைதான்

ஆனால் அவர் சற்று விளக்கிச் சொல்லியிருக்க வேண்டும்

தியானத்தில் ஆழமாக மூழ்கி

நீண்ட நாட்களுக்குப் பிறகு

அதன் உச்சத்தன்மையை அடைந்தவர்களுக்கு

அது தேவையில்லைதான்

ஆரம்பத்தில் அல்ல

ஆற்றின் மறுகரையை அடைய ஓடம் தேவை

அடைந்த பிறகு ஓடத்துக்கு என்ன வேலை 

அதைப்போலத்தான் தியானமும் ❗

Comments