🌸மனம் தன்னைப் பற்றியே எப்பொழுதும் சிந்திக்கும்...
🌸மனம் தன்னைப் பற்றியே
எப்பொழுதும் சிந்திக்கும்...
அது ஆணவம் கொண்டது...
🌸'பிரெஞ்சுப் புரட்சி'யின் போது...
பாரிஸ் நகரிலிருந்து வந்த ஒருவரை...
ஒரு கிராமவாசி, தடுத்தி நிறுத்தி...
தலைநகரில் என்ன நடக்கிறது?
என்று அவரிடம் கேட்டார்...
🌸ஆயிரக்கணக்கில் தலைகள்
வெட்டப்படுகின்றன என்று அவர் சொன்னார்...
🌸"அட அக்கிரமமே!!
என் தொப்பி வியாபாரம் என்ன ஆவது?"
என்று அலறினார் கிராமவாசி..
🌻மனதின் போக்கு இப்படித்தான்...
🌻இதன் காரணமாகத்தான்...
அது உலகளாவிய அளவில்
சிந்திக்கத் தவறிவிடுகிறது...
🌻பிறகு, அது வாழ்க்கையைப் பற்றி
எவ்வாறு அறியும்?
வாழ்வை அறியாததால்...
மனதால் வாழ்வுடன் ஒன்றிணைய முடியாது...
🌻உண்மையில்,
மனதில் அறிதல் என்பதே இல்லை...
"மேம்போக்கான அறிவு மட்டுமே
அதில் உண்டு..."
🌻நெருக்கமான, ஆழமான அறிதல்...
மனமற்ற நிலையில்தான்
சாத்தியமாகும்...
🌻"தியானம் என்பது...
மனம் கரைந்து போய்...
இல்லாமற் போவது."
☘மூன்றாவது கோப்பை தேநீர்.
🌿ஓஷோ🌿
Comments
Post a Comment