நாங்கள் கடவுளை நம்புகிறோம் - Osho
🎊 "நாங்கள் கடவுளை நம்புகிறோம்
முதலில் ஆதாரங்களைக் கொடுங்கள்"
என்று சொல்லும் இலட்சக்கணக்கான மக்கள் இருப்பதை
நீங்கள் கவனித்திருப்பீர்களே
ஆனால்
சாத்தான் இருப்பதற்கான ஆதாரங்களைக் குறித்து யாரும் புத்தகம் எழுதவில்லை
யாருமே சாத்தான் இருப்பதற்கு எந்த ஆதாரமும் தேவையிருக்க வில்லை
"ஆதாரம் இருந்தால்தான் சாத்தானை நம்புவேன்"என்று யாருமே சொல்வதில்லை
சாத்தான் எங்கேயும் இருப்பதுதான்
ஏற்கனவே உங்களுக்குத் தெரியுமே
கடவுளைத்தான் காணோம் எங்கேயும்...
நல்லதிற்கு ஏன் நிரூபணம் தேவைப்படுகிறது...???
தீமைக்கு ஏன் நிரூபணம் தேவைப்படுவதில்லை...???
உங்களது மனோபாவத்தைக் கவனித்தால்
அற்புதமானதொரு அம்சம்
மனித மனதின் இரகசியம் வெளிப்படும்
அடியாழத்தில் எல்லோருமே நல்லவராக இருக்கவே விரும்புகிறார்கள்
ஆனால்
அது சிரமம்
அப்படியானால் என்னதான் செய்வது...???
மற்றவரைக் கெட்டவர் என்று நிரூபித்து விடுவது;
'நீ என்னைவிடப் படுமோசம்
அதனால்
நானே கொஞ்சம் தேவலாம்' என்ற தொனியில்
இது மிகவும் எளிதானது
இது போல் எளிதானது எதுவுமே இல்லை
மற்றவர் தீமையைப் பெரிதுபடுத்தினால் போதுமானது
அப்படிச் செய்வதை யாராலும் தடுக்க முடியாதே
அப்படிப் பெரிதுபடுத்தப்பட்ட பிறர் தீமைக்கு முன்னால்
நீங்கள் அப்பாவிபோல் காணப்படுகிறீர்கள்
அதனால்தான் யாராவது ஒருவர் இன்னொருவரைப் பற்றி
"அந்த ஆள் கெட்டவன்"என்று சொல்லும் போது
நீங்கள் ஒன்றுமே சொல்வதில்லை
அதை அப்படியே ஏற்றுக் கொள்கிறீர்கள்
அதோடு
"நானும்கூட அப்படித்தான் நினைத்தேன்"
என்று சொல்லி விடுகிறீர்கள்
நாமெல்லாரும் மற்றவர்களைத் திருடன், கொலைகாரன், கெட்டவன் என்று நிரூபித்துக் கொண்டே இருக்கிறோம்
எல்லோருமே தவறு என்று நிரூபித்துவிடும்போது
நான் நல்லவன் என்ற உணர்வு சட்டென வந்துவிடுகிறது
ஆனால்
யாராவது இன்னொருவரைப் பற்றி நல்லதாக ஏதாவது சொல்லிவிட்டால்
நீங்கள் எதிர் வாதம் செய்கிறீர்கள்
அவர் கூற்றுக்கு ஆதாரம் கேட்கிறீர்கள்
இது ஒரு சார்பு நிகழ்ச்சி
உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள தேவையில்லை பாருங்கள்
மற்றரைக் கெட்டவர் என்றால் போதுமே 🎊
🎉 ஓஷோ 🎉
Comments
Post a Comment