Google

நீங்கள் நீங்களாக இருங்கள்.- Osho



நீங்கள் நீங்களாக இருங்கள்.

குழந்தைத்தனத்தோடு இருப்பதில் தவறு ஒன்றுமில்லை. குழந்தைத்தனமாக இருப்பது தவறு என்று உங்களுக்கு கற்றுக் கொடுக்கப் பட்டதால், நீங்கள் "மனப்பான்மைகளை" ஏற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டீர்கள். உங்கள் குழந்தைப் பருவத்திலிருந்தே முதிர்ச்சியோடு இருக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறீர்கள்.
ஒரு குழந்தை எப்படி முதிர்ச்சியோடு இருக்க முடியும்?
ஒரு குழந்தை குழந்தைதான்.
அது குழந்தைத்தனத்தோடு தான் இருக்க வேண்டும்.

ஆனால் அதற்கு அனுமதி இல்லை. சின்ன குழந்தைகள் கூட இராஐதந்திரம் பழகுகுகின்றனர். பாசாங்கு செய்யத் தொடங்குகின்றனர். பொய்யான வழிகளில் நடக்கத் தொடங்குகின்றனர். தொடக்கத்திலிருந்தே அவர்கள் பொய்களாகின்றனர்.அந்த பொய்களும் கூடவே வளருகின்றன.

பிறகு ஒரு நாள் நீங்கள் உண்மையைத் தொடுகின்றீர்கள், சாஸ்திரங்களைப் படிக்க வேண்டியுள்ளது. சாஸ்திரங்களில் அல்லது மத நூல்களில் உண்மையில்லை.உண்மை என்பது உங்கள் உயிருருவில் அடங்கியுள்ளது. அதுதான் உண்மையான சாஸ்த்திரம், வேதம்,குரான்,பைபிள் எல்லாமே = உங்கள் பிரக்ஞையில் அடங்கியிருக்கிறது.

உங்களுக்குத் தேவையானவற்றை எல்லாம் நீங்களே வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

இது இறைவன் கொடுத்த பரிசு. எல்லோரும் உண்மையைத் தங்களின் உயிருருவில் தாங்கிப்  பிறக்கின்றனர்.வாழ்க்கை தான் உண்மை. ஆனால் நீங்கள் பொய்களைக் கற்றுக் கொள்ளத் தொடங்கி விட்டீர்கள். துணிவோடு இருங்கள்.நிச்சயமாக ஒரு பெரும் அச்சம் உங்களுக்குள் எழுவதை உணருவீர்கள். இது ஏனென்றால் எப்பொழுதெல்லாம் உங்கள் ஆளுமையைக் கைவிடுகின்றீர்களோ,அப்போதெல்லாம் இதுவரை அனுமதிக்கப்படாத உங்கள் குழந்தைத் தனம் வெளிப்படும். நீங்கள் அச்சம் கொள்வீர்கள். "என்ன!இந்தக் கட்டத்தில், குழந்தைத் தனத்தோடு இருக்கப் போகின்றேனா? எல்லோருக்கும் நான் ஒரு பேராசிரியர் அல்லது இன்ஜினியர், டாக்டர் என்று தெரிந்து இருக்கையில் நான் குழந்தைத் தனமாக இருக்கப் போகிறேனா?" அந்த பயம் எழும். பொதுமக்களின் கருத்துப் பற்றிய பயம், மக்கள் என்ன நினைப்பார்கள் என்ற பயம்.

இந்த பயம்தான் உங்களை ஆரம்பத்தில் இருந்தே அழித்து விட்டது. இதே பயம்தான் நஞ்சாகி விட்டது. "என் அப்பா என்ன நினைப்பார்? என் அம்மா என்ன நினைப்பார்? ஆசிரியர்கள், சமுதாயம் என்ன நினைக்கும்? " அந்தச் சின்னக் குழந்தை சாதுரியம் பழகத் தொடங்குகின்றது. அது தன் இதயத்தை வெளிப்படுத்தாது, மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அதற்குத் தெரியும். அதனால் ஒரு முகத்திரையைப் போட்டுக் கொள்ளும். மனிதர்கள் பார்க்க விரும்புவதை அது காட்டும்.

இதுதான் ராஜதந்திரம்,
இதுதான் அரசியல்,இதுவே நஞ்சு.

உன்னால் கடக்க முடியும்.
THE WISDOM OF THE SANDS.

ஓஷோ

Comments