Google

எண்ணங்களைக் கவனிப்பதே தியானம் ...-Osho



🌟உங்கள் மனதில் சதா ஓடிக் கொண்டிருக்கும்
எண்ணங்களைக் கவனிப்பதே தியானம் ...

எவ்வித தீர்மானமும் மதிப்பீடும் இன்றி
எவ்வித விருப்பும்  வெறுப்பும்  இன்றி ...

உங்கள் மனதில் ஓடும் எண்ணங்களை
கவனிப்பவராக இருங்கள் ...

நீங்கள்பத்து சதவீதம் கவனிப்பவராக
விழிப்புணர்வுள்ளவராக இருப்பின் ...

அதற்கு தேவையான சக்தி உங்கள் மனதின்
செயல் பாடுகளில் இருந்து குறைந்து ...

கவனிப்பவருக்கு வந்து விடுகிறது ...

இப்பொழுது மனதுக்கு தொன்னூறு
சதவீத சக்திதான் கிடைக்கிறது ...

இப்படியாக உங்கள் கவனிப்பின் சக்தி
வளர்ந்து கொண்டே செல்லும்போது ...

மனம் தனது சக்தியை இழந்து கொண்டே
செல்கிறது ..

இப்பொழுது மனதில் எண்ண ஓட்டங்கள்
குறைந்து கொண்டே போகிறது ...

கவனிப்பவருக்கு அதிகமான சக்தி
வந்து கொண்டேயிருக்கிறது ...

உங்களுடைய சாட்சித் தன்மை நன்றாக
வளர்ச்சி பெற்று பலமுள்ளதாக ஆகி விடுகிறது ...

நூறு சதவீத சக்தி மனதில் இருந்து
கவனிப்பவருக்கு வந்து விட்டால் ....

மனதில் எண்ண ஓட்டங்கள் சுத்தமாக
மறைந்து விடுகின்றன ...

இப்பொழுது மனதின் திரை காலியாக
இருக்கிறது ...

எதுவும் அதில் ஓடவில்லை
அப்போது கவனிப்பவர் மட்டுமே இருக்கிறார் ...

கவனிப்பவர் மட்டுமே எஞ்சி இருக்கும் போது
கவனிப்பவரே கவனிக்கப் படுகிறார் ...

அறிந்து கொள்பவர் தன்னையே அறிந்து
கொள்கிறார் ...

காண்பவர் தன்னையே கண்டு
கொள்கிறார் ...

பிற பொருள்கள் எண்ணங்கள் மீது சென்ற
சக்தி தன்னிடமே திரும்பி விடுகிறது ...

அதுவே அதற்கு ஔியாக
ஆகி விடுகிறது ...

அதுவே பிரகாசித்துக் கொள்கிறது
ஔி தன்னையே ஔிரச் செய்கிறது ...

இதை ஞானம் அடைதல் என்று
சொல்லலாம் ...🌟

ஓஷோ ...🌺🌿

Comments