Google

தியானத்திற்கு_எது_தேவை -Osho



#தியானத்திற்கு_எது_தேவை

மகாவீரர் 12 ஆண்டு காலம் மௌனத்தில் இருந்தார். அவர் பேசமாட்டார் ,.

 கிராமங்களுக்கு செல்ல மாட்டார். ஒருவரையும் பார்க்க மாட்டார்.

அவர் பேச ஆரமித்தபோது, சில நபர்கள் கேட்டார்கள், 'எதற்கு இத்தனை நாள் பேசாமல் இருந்தீர்கள்.?'

 அவர் சொன்னார், 'மௌனத்தை அடைய பெற்ற பின்னர் தான் பேச்சு மதிப்புமிக்கதாக ஆகின்றது.

அப்படி இல்லாமல் பேசும் பேச்சு எல்லாம் வீணானது, வீணானது மட்டும் இல்லாமல் அபாயகரமானதும் கூட.

ஏனெனில் மற்றவர்கள் மீது குப்பையை வாரி எரிகின்றீர்கள்.

இதனால் தான் என்னுடைய உள்ளே நடைபெறும் பேச்சு நிற்கும்வரை காத்திருந்து இப்போது பேச ஆரமித்துள்ளேன்.

உள்பேச்சு மறைந்தஉடன் வெளியே பேசலாம், அது குற்றம் ஆகாது.

             அவர்கள் காத்து இருக்கலாம் ஏனெனில் கிழக்கு மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டுள்ளது.

அவர்களால் காத்து இருக்க முடியும்.

ஒரு சீடன் தன் குருவிடம் 30 ஆண்டு காலம் காத்து இருந்ததாக அநேக கதைகள் உண்டு.

அவன் ஒன்றும் கேட்கமாட்டான்.

ஆனால், குரு, ' நீ எதற்காக இங்கு வந்திருக்கிறாய்' என்று கேட்பதற்காக காத்து இருப்பான்.

 30 வருட காலம் என்பது மிகவும் அதிகமானது.

ஒரு முழு வாழ்க்கையே வீணாகி விட்டது. ஆனால் 30 ஆண்டு காலம் காத்து இருப்பது அதன் வேலையை செய்யும்.

மேலை நாட்டு மக்கள் சிலர் என்னிடம் சொல்கிறார்கள்.

'இன்று மாலை நாங்கள் நாட்டுக்கு செல்கின்றோம்.

ஆகவே நாங்கள் அமைதியாக இருக்க, மௌனமான நிலைக்கு செல்ல ஏதேனும் வழி சொல்லுங்கள்.

அவர்கள் பழக்கப்பட்ட வழியில் அவர்கள் சிந்தனை செய்கிறார்கள்.

திடீர்-காபி அதுபோல் அவர்கள் திடீர் தியானம் ஏதாவது இருக்கும் என்று எண்ணுகிறார்கள். அப்படி ஏதும் வழி இல்லை.

ஒரு நீண்ட முயற்சி அதிகமான பொறுமை தேவைப்படுகிறது.

நீங்கள் மிகவும் அவசரப்பட்டால் நீங்கள் அடைய நெடுநாட்கள் ஆகலாம்.

 நீங்கள் அவசரப்படாமல் இருந்தால் இந்த நொடியிலேயே உங்களுக்கு அது நிகழ கூடும்.
.

-- ஓஷோ --

வெறும் கோப்பை

பக்கம்-92,93.

Comments