Google

புதிய மனிதன் ஜோர்பா வாழ்வை வாழ்வான் - OSHO




❤புதிய மனிதன் ஜோர்பா வாழ்வை வாழ்வான். இந்த உலகை, இந்த
உடலை, அதன் உணர்வுகளை, அதன் இன்பங்களை மறுக்கவோ, வெறுக்கவோ
மாட்டான்.


இந்த உடலுக்கும், உலகுக்கும் எதிரான வாழ்வை தேர்வு செய்ய மாட்டான். இந்த
உடலின் உணர்வுகளை அமுக்கி வைக்கவும், மறைத்துக் கொள்ளவும் மாட்டான்.

நான்
மனிதன்.

 அப்படியிருப்பதை கொண்டாடுகிறேன் என்று வாழ்வான். அதே
சமயம் அடிமையாக்கும் சமூக போதைகளுக்காகவும் வாழ மாட்டான். மதிப்பு, கௌரவம், அந்தஸ்து, அதிகாரம், புகழ், பாராட்டு போன்ற சமூக போதைகளில் சிக்கிக் கொள்ளாமல் வாழ்வான்.


நேர்மை, வீரம், நட்பு, காதல், மனிதநேயம், உறவு, அழகு, இசை, நடனம் போன்ற மனித குணங்களோடு இன்பம் துய்ப்பான்.

 மனிதனுக்கு வெறியூட்டி பிரித்தாளும் சூழ்ச்சியாக மதம், மொழி, இனம், நாடு போன்றவை பயன்படுத்தப் படுவதிலிருந்து விலகி நிற்பான்.


ஜோர்பா எளியவன். இயல்பானவன். தன் உணர்வுகளின் படி வாழ்பவன். போட்டியும் பொறாமையும் எழும்படியான எந்தவித திணிக்கப்பட்ட முறைப்படுத்தலும் இல்லாதவன். அன்பும் நேசமும் நட்பும் உறவுமென மனிதநேயத்தில் வாழ்பவன்.

இவன் ஜோர்பா.

 இவன்
சமூகத்தில் வாழ்பவன். சமூகத்தின் அநீதிகளை, தவறுகளை தட்டிக் கேட்பான்.

 சமூகத்திலிருந்து தப்பிக்க மாட்டான். சமூகத்தில் பங்கு கொள்வான், சமூகத்தில்
இவன் இருப்பான். ஆனால் தனி மனிதனாக தன் உணர்வுகளை வாழ்பவனாக இருப்பான். சமூகத்திற்கு ஏற்ற முகமூடி அணிபவனாக, போலித்தனம் கொண்டவனாக, சமூகத்திற்கு பயப்படுபவனாக இருக்க மாட்டான்.


 சமூகம் இவனால் பயனுறும். வளப்படும். ஆனாலும்
சமூகம் என்பது நமது வசதிக்காக நாம் செய்துகொள்ளும் ஒரு கற்பனைக் கட்டமைப்பே
என்பதைத் தவிர அவன் அதற்கு அடிமைப்பட்டு விடமாட்டான்.



 முன்னுரிமை கொடுத்துவிட மாட்டான். தனி மனிதனே நிஜம். சமூகம் ஒரு கற்பனை. தனிமனிதனுக்கே உணர்வும் உயிரும் உள்ளது.


 சமூகத்திற்கு தனியாக உடலோ உயிரோ இல்லை. இதை உணர்ந்து வாழ்வான்.❤❤❤❤

Comments