Google

நான் கட்டாயமாக அளவுக்கு அதிகமாக சாப்பிடுபவன். எனக்கு உதவ ஏதாவது யோசனைகளை உண்டா? - OSHO



கேள்வி :   நான் கட்டாயமாக அளவுக்கு அதிகமாக சாப்பிடுபவன். எனக்கு உதவ ஏதாவது யோசனைகளை உண்டா?
ஓஷோ பதில்:  பசியோடிருக்கும்போது, கொஞ்சம் தியானம் செய்தால் என்ன? அவசரமேயில்லை. பசியோடிருக்கும்போது கண்களை மூடிக் கொள்ளுங்கள், அந்தப் பசியோடு தியானம் செய்யுங்கள், உடல் உங்களை எப்படி உணர்கிறது? உங்களுக்குத் தொடர்பு விட்டுப் போகும். கரணம் நமது என்பது உடலோடு என்பது மிகவும் குறைவு. அதிகம் மனதோடுதான். நீங்கள் தினமும் ஒரு மணிக்கு சாப்பிடுகிறீர்கள். நீங்கள் கடிகாரத்தைப் பாருங்கள். இப்போது ஒன்று - அதனால் உங்களுக்குப் பசிக்கிறது. அந்த கடிகாரம் சரியான நேரத்தைக் கூடக் காட்டாமல் இருக்கலாம். இப்போது யாராவது சொல்கிறார்கள் , "கடிகாரம் நள்ளிரவோடு நின்று போய்விட்டது - அது செயல்படவில்லை. இப்போது பதினொரு மணிதான் ஆகிறது. "பசி மறைந்து போகிறது. இந்தப் பசி என்பது பொய். பசி என்பது பழக்கம். காரணம் அதை மனம் உருவாக்குகிறது. உடல் அல்ல. மனம் சொல்கிறது, "ஒரு மணி உனக்குப் பசி". நீங்கள் பசியோடுதான் இருக்க வேண்டும். நீங்கள் எப்போதுமே பசியோடு இருந்திருக்கிறீர்கள் ஒரு மணிக்கு, அதனால் உங்களுக்குப் பசி.

              நம் பசி என்பது 99 சதவிகிதம் பழக்கம். சில நாட்கள் உண்ணா நண்பு இருந்து பாருங்கள். உண்மையான பசியை உணர. பிறகு நீங்கள் வியந்து போவீர்கள். முதல் மூன்று நாட்களுக்கு உங்களுக்கு மிகவும் பசிக்கும். நான்காவது அல்லது ஐந்தாவது நாட்கள் உங்களுக்கு அவ்வளவு பசிக்காது. இது தர்க்கமற்றது. உண்ணாமல் இருக்கிற நாட்கள் அதிகமாகும்போது உங்களுக்கு இன்னும் இன்னும் அதிகமாக பசிக்க வேண்டும். ஆனால் மூன்றாவது நாளுக்குப் பிறகு உங்களுக்குக் குறைவாக பசிக்கிறது. பிறகு ஏழாவது நாளுக்குப் பிறகு உங்களுக்குப் பசியே சுத்தமாக மறந்து போகும். பிறகு பதினோராவது நாளுக்குப் பிறகு எல்லோருமே அநேகமாகப் பசியை முழுமையாக மறந்துவிட்டீர்கள். உடம்பும் சரியாகவே இருக்கிறது. ஏன்? நீங்கள் சிப்படாமல் இருப்பதைத் தொடர்ந்தால்..... விரதத்தில் அதிக வேலை செய்திருக்கிறவர்கள் சொல்வார்கள் -- இருபத்து ஒன்றாம் நாள் உண்மையான பசி மறுபடியும் ஏற்படும்.

              அதாவது மூன்று நாட்கள் உங்கள் மனம் உங்களுக்குப் பசிக்கிறது என்று உங்களை வற்புறுத்திக் கொண்டேயிருந்திருக்கிறது. காரணம் நீங்கள் உணவு எடுத்துக் கொள்ளவில்லை  . ஆனால் அது பசியல்ல . மூன்று நாட்களுக்குள் மனம் உங்களிடம் சொல்லி சொல்லி வெறுத்துப் போகிறது, நீங்கள் கேட்க மறுக்கிறீர்கள், நீங்கள் மிகவும் மாறுபட்டிருக்கிறீர்கள். நான்காவது நாள் மனம் எதையும் சொல்வதில்லை. உடலுக்குப் பசியின் உணர்வே வராது. காரணம் நீங்கள் அதிக கொழுப்பைச் சேர்த்து வைத்திருக்கிறீர்கள் -- அந்தக் கொழுப்பு போதும். உங்களுக்கு மூன்றாவது வாரம்தான் பசிக்கும். இது ஒரு சாதாரண உடம்புக்கு.

             உங்களிடம் அதிக அளவு கொழுப்பு சேர்ந்திருந்தால், மூன்றாவது வாரம் கழித்து கூட நீங்கள் பசியை உணர மாட்டீர்கள். மூன்று மாதங்கள், அதாவது 90 நாட்கள் வரை வாழ்வதற்கான கொழுப்புகளை சேர்க்க சாத்தியக்கூறுகள் உள்ளன. உடல் அது சேர்த்து வாய்த்த கொழுப்பு முடிந்தவுடன், பிறகு முதல் முறையாக உண்மையான பசி தோன்றும். ஆனால் அது கஷ்டம். நீங்கள் தாகத்தோடு முயற்சி செய்யலாம். அது சுலபம். ஒரு நாள் தண்ணீர் குடிக்காதீர்கள், காத்திருங்கள், பழக்கத்தினால் குடிக்காதீர்கள்.  தாகம் என்றால் என்னவென்று காத்திருந்து பாருங்கள். நீங்கள் ஒரு பாலைவனத்தில் இருந்தால் தாகம் என்றால் உங்களுக்கு என்ன அர்த்தம்.....

              உங்களுக்கு உங்கள் நாக்கு வழியாகத்தான் தெரியும். அந்த நாக்கு உங்களை ஏமாற்றும். அந்த நாக்கு வெகுநாட்களாக இந்த மனத்திற்குத்தான் வேலை செய்து கொண்டிருந்தது. உடலுக்கு வேலை செய்யவே இல்லை. அந்த நாக்கு உங்களை ஏமாற்றலாம். அது மனதின் அடிமையாகிவிட்டது. அது சொல்லிக்கொண்டே போகிறது, 'சாப்பிட்டுக் கொண்டேயிரு -- அது மிகவும் அழகானது'  அது உடலுக்கு இனியும் வேலை செய்யவில்லை. இல்லையென்றால் நாக்கு சொல்லியிருக்குமே, "நிறுத்து" நாக்கு சொல்லியிருக்கும், "நீங்கள் சாப்பிடுவதெல்லாம் பயனற்றது. அதனால் சாப்பிடாதே".  மாடுகள் - எருமைகள் நாக்குகள் கூட உடலின் விசுவாசிகள் உங்களுடையதை விட. ஒரு குறிப்பிட்ட வகையான புல்லைத் தின்னும்படி நீங்கள் ஓர் எருமையைக் கட்டுப்படுத்த முடியாது. அது தேர்ந்தெடுக்கும். அதற்கு உடல்நலம் சரியில்லாதபோது நீங்கள் ஒரு நாயை சாப்பிடக் கட்டுப்படுத்த முடியாது. அது உடனே வெளியே போய்விடும். புல்லைத் தின்னும், வாந்தி எடுக்கும். அதற்கு உடலுடன்தான் அதிக தொடர்பு.

             முதலில், உடல் பற்றிய நிகழ்வின் ஆழ்ந்த விழிப்பு ஒவ்வொருவருக்கும் வேண்டும். ஒரு புதுப்பித்தல், ஒரு மீட்சி உடலுக்கு தேவை -- நீங்கள் ஒரு இறந்த உடலை சுமந்து கொண்டிருக்கிறீர்கள். பிறகுதான் நீங்கள் உணர்வீர்கள், மெல்ல மெல்ல முழு உடலையும் அதன் ஆசைகளோடு, தாகத்தோடு, பசியோடு அது இதயத்தைச் சுற்றி நடக்கிற புதுப்பித்தல், பிறகு அந்த இதயத் துடிப்பு என்பது இயந்திரத்தனமல்ல. அது வாழ்க்கைத் துடிப்பு, அது வாழ்க்கையின் நாடி அதிர்வு. அந்த நாடித்துடிப்பு போதுமென்ற மனதையும் பேரின்பத்தையும் கொடுக்கும்.

ஓஷோ (மருத்துவத்திலிருந்து மனமற்ற நிலை வரை பக்கம் 236)

Comments