விழிப்பாக இருங்கள், மிகவும் பயனுள்ளவராக இருக்காதீர்கள். - OSHO
விழிப்பாக இருங்கள், மிகவும் பயனுள்ளவராக இருக்காதீர்கள். இல்லையெனில் மக்கள் உங்களைப் பயன்படுத்திக் கொள்வார்கள். பிறகு உங்களைக் கையாள, நிர்வகிக்கத் தொடங்கி விடுவார்கள். பிறகு உங்களுக்குத் தொந்தரவுதான். உங்களால் பலன் கொடுக்க முடிகிறது என்றால் உங்கள் வாழ்க்கை முழுவதும் நீங்கள் பலன் கொடுக்க வேண்டும் என வற்புறுத்தப் படுவீர்கள். உங்களால் சில குறிப்பிட்டவற்றைச் செய்ய முடிகிறது என்றால், திறமையுடையவராக இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் வீணாக்கப்பட முடியாது.
.
பயனற்ற தன்மை தனக்கே உரிய இயல்பான சில பயன்களையும் பெற்றுள்ளது. நீங்கள் அடுத்தவர்களுக்குப் பயனுள்ளவர்களாய் இருக்க முடிந்தால் பிறகு நீங்கள் அடுத்தவருக்காக வாழ வேண்டும். பயனற்றிருந்தால் யாரும் உங்களைத் திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள், உங்கள் இருத்தலையே யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். நீங்கள் தனித்து விடப்படுவீர்கள். சந்தைப் பகுதியில்கூட நீங்கள் இமயமலையில் இருப்பதைப் போல் வாழ்வீர்கள். அந்தத் தனிமையில் நீங்கள் வளர்வீர்கள். உங்கள் முழுச் சக்தியும் உள்நோக்கிச் செல்லும்!”
.
“வெற்றுப் படகு”-ஓஷோ
__________________________________________________________________________
.
ஜென்னின் சாராம்சம் கொண்ட ஹைகூ .
.
“சும்மா இரு
வசந்தம் வருகிறது
புல் தானாக வளர்கிறது!”
Comments
Post a Comment