Google

கேள்வி : - புலன் ஆசைகளை அடக்கலாமா....??? முக்கியமாகப் பெண் ஆசையை...???





ஓஷோ கேள்வி பதில்கள்

கேள்வி : - புலன் ஆசைகளை அடக்கலாமா....???

முக்கியமாகப் பெண் ஆசையை...???

பதில் : - புலன் ஆசைகளை - முக்கியமாக பெண் ஆசையை ஒருக்காலும் அடக்கக்கூடாது

அந்த அடக்கப்பட்ட ஆசை பிரக்ஞை மனதிலிருந்து பிரக்ஞையற்ற மனதிற்குச் சென்று ஆழமாகப் பதுங்கிவிடும்

அது மெல்ல மெல்ல நாளமில்லாச் சுரப்பிகளைத் தாக்கும்

இதனால் பல உடல் கோளாறுகள் ஏற்படும்

மேலும் இந்த அடக்கப்பட்ட உணர்வு  சந்தர்ப்பம் பார்த்து இருக்கும்

சமயம் வாய்த்தால்

பாம்பு போல சீறிப்பாயும்

அப்பொழுது அவன் தன்னிலை மறந்து ஒரு பைத்தியம்போலச் செயல்படுவான்

அல்லது மிருகம்போல செயல்படுவான்

பெரும்பாலான போலிச்சாமியார்கள் அடக்கப்பட்ட பாலுணர்வு கொண்டவர்கள்தான்

இவர்களிடம் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்

எந்தப் புலன் உணர்வையும் அனுபவித்துத்தான் கடந்து செல்ல முடியும்

அதற்கு அதை அனுபவிக்கும் பொழுது நீங்கள் அதிலேயே பிரக்ஞையாக இருக்க வேண்டும்

உங்கள் மனம் அதிலேயே லயிக்க வேண்டும்

நீங்கள் உடலுறவில் ஈடுபட்டால்

உங்கள் மனமும் உடலும் நிகழ்காலத்திலேயே ஐக்கியமாகி இருக்க வேண்டும்

இது மிக முக்கியம்

இதற்கு ' தந்திராயோகம் ' என்று பெயர்

இப்படி லயித்து அனுபவித்த மனம்

ஒரு கட்டத்தில் திருப்தியுற்று அதை விட்டுவிடும்

அப்பொழுதுதான் மனம் பிரம்மச்சரிய நிலையை உண்மையாக அடையும்

அதற்கு முன்பு நடக்காது

இது எல்லா பழக்க - வழக்கங்களுக்கும் பொருந்தும்

முக்கியமாக குடிப்பழக்கம் புகைப்பழக்கதுக்குப் பொருந்தும்

இவற்றை மனம் வெறுக்கச் செய்ய

முதலில் மனத்தை அதனால் நிரப்ப வேண்டும்

அதற்கு ஒரே வழி அவற்றை பிரக்ஞையாக அனுபவித்து விடவேண்டும்

மற்ற முயற்சிகள் எல்லாம் தற்காலிகமானதுதான்

 நிரந்தரமானது அல்ல "

கேள்வி : - ஆசைகளை விட வேண்டும் என்று சொல்லுவதுகூட ஒரு ஆசை இல்லையா...???

அதைப்போலவே கடவுளை அடைய வேண்டும் என்று ஆசைப்படுவதும் ஒரு ஆசைதானே...???

பதில் : - கிருஷணன் கீதையில் சொன்னது

 'பலனை எதிர்பார்த்து ஒரு காரியத்தைச் செய்தால்

அந்தச் செயல் முழுமையாக இருக்காது

முழுமையற்ற செயலினால் ஏற்படும் பலனும் முழுமையாக இருக்காது'

இதற்கு என்ன அர்த்தம்..???

நீங்கள் கடவுளை அடைய வேண்டும் என்று ஒரு பலனை எதிர்பார்த்து தியானம் செய்தால்

அது முழுமையாக ஆகாது

தியானத்தை தியானத்திற்காகவே செய்யவும்

அப்பொழுது பலன் தானே வரும்

ஆனால் தியானம் செய்வதில் மட்டும் வைராக்கியமாக உறுதியாக இருக்கவும்

 மற்றவை தானேவரும்"

ஒரு சீடன் : " ஓஷோ , உண்மையிலேயே நீங்கள் யார்..???

ஓஷோ : " எனக்குத் தெரியாத விஷயம் இதுதான்

உங்களுக்குத் தெரிந்தால் கூறுங்கள்

சீடன் : " நீங்கள் சிருஷ்டிகர்த்தா எனப்படும் கடவுளா..???

ஓஷோ : "நான் அந்தப் பைத்தியக்காரன் இல்லை"

சீடன் : "நீங்கள் உலக மகா ஜெகத்குருவா..???"

ஓஷோ : " அதற்கு என்று சில பைத்தியக்காரர்கள் இருக்கிறார்கள்"

சீடன் : " நீங்கள் உங்களையே அடிக்கடி 'நான் ஒரு பைத்தியக்காரன் ' என்று கூறிக்கொள்ளுகிறீர்களே...!!! ஏன்..???

ஓஷோ : " வேறு எப்படிச் சொல்ல..???

நான் ஒரு ஆன்மீகப் பைத்தியக்காரன்தான்"

சீடன் : " சுருக்கமாக உங்களுடைய செய்தி என்ன....???"

ஓஷோ : "எல்லாம் நன்மைக்கே"

சீடன் : "உங்களை இந்த நாட்டு பிரதமமந்திரியாக ஆக்கினால்..???"

ஓஷோ : "உடனே ராஜினாமா செய்துவிடுவேன்"

Comments