ஆவிகள் மனித உடலில் புகுவது உண்மையா? -OSHO
[ஆவிகள் மனித உடலில் புகுவது உண்மையா?]
உலகில் நல்ல ஆவிகளும் உண்டு,கெட்ட ஆவிகளும் உண்டு.இவைகளுக்கு ஊடகமாக ஒரு உடல் தேவைப்படுகிறது.
ஊடகம் கிடைத்தவுடன் அது செய்திகளை அனுப்பிக்கொண்டே இருக்கும்.நல்ல ஆவிகள் கடவுளை போன்ற ஆவிகளாகும் அது செய்திகளை அனுப்பும்.
கெட்ட ஆவிகள் அதற்கு தகுந்த மனம் கிடைத்தவுடன் உள் புகுந்துவிடும்.அம்மனத்தை தன் விருப்பப்படி ஆட்டிவைக்கும்.அது தன் கடமைகளை அதன்மூலம் நிறைவேற்றீக்கொள்ளும்.
உதாரனமாக கொலை செய்ய தூண்டும் ஆற்றலும் அதற்கு உண்டு.ஒரு பேய் பிடித்தவனை மனோவசியத்துக்கு உள்ளாக்கிய போது ஒரு விஷயம் தெரிந்தது.அவனை பிடித்திருப்பது 1500 ஆண்டுகளுக்க முந்தைய ஆவி என்று.
அவன் தற்போது தான் ஒரு அந்த வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளான்.அந்த ஆவி அவனை பிடித்துள்ளது.அந்த ஆவி ஏற்கெனவே பல பேர் உடலில் புகுந்து 36 கொலைகளை செய்துள்ளது.அவனை முற்பிறவியில் ஒரு குடும்பம் கொலை செய்துள்ளது.அதனால் அந்த ஆவி அந்த குடும்ப உருப்பினர்களை ஒவ்வொருவராக இத்தனை ஆண்டுகளாக கொலை செய்து வந்துள்ளது.தற்போது ஒருவனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது தெரியவந்தது.பின்பு அவனை அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றினோம்.
புத்தர் ஞானமடைந்தவுடன் மௌனவிரதம் மேற்கொண்டார்.அவர் மௌனத்தை கலைக்க கடவுள் எனும் நல்ல ஆவிகள் முயற்சி மேற்கொண்டன.அதற்கு பின் தான் அவர் பேச ஆரம்பித்தார்.அந்த கடவுள்கள் தன் தகவல்களை மக்களிடம் கொண்டு செல்ல புத்தரை அனுகின.ஆனால் அவர் மறுத்துவிட்டார்.தன் சொந்த கருத்துகளையே அவர் பேசத்தொடங்கினார்.மகாவீரர் ஒருமுறை காட்டில் நின்றுகொண்டிருந்தார்.ஒரு இடையன் தன் ஆடுகளை பார்த்துக்கொள்ளும்படி அவரிடம் சொல்லிவிட்டு சென்றான்.அவர் அமைதியாக இருந்துவிட்டார்.இடையன் திரும்பிவந்து பார்த்த போது ஒரு ஆடுகள் கூட அங்கே இல்லை.கோபம் கொண்ட இடையன் மகாவீரரை இரும்பு தடியால் தாக்க ஆரம்பித்துவிட்டான்.இதை கண்ட இந்திரனின் ஆவி மகாவீரரின் மனதை தொடர்பு கொண்டு தான் காப்பாற்ற உத்தரவிட ஆணையிட வேண்டினார்.ஆனால் அவர் இறைபந்தத்தில் சிக்கிக்கொள்ள தான் விரும்பவில்லை என தன் மனதின்மூலம் சொல்லிவிட்டார்.
ஆலிஸ் பெய்லி என்ற பெண்மணிக்கு திபெத்திய மலைகளில் வாழ்ந்த ஞானி கே என்பவர் தொடர்ந்து செய்திகளை அனுப்பிக்கொண்டிருந்தார்.ஆவி வடிவிலிருக்கும் சில உன்னத ஆவிகள் சாதகமான உடல் கிடைத்தவுடன் தன் அற்புத செய்திகளை வெளிப்படுத்து ஆரம்பிக்கின்றன.அவருக்கு முன்பாகவே மேடம் பிளாவட்ஸ்கி அன்னிபெசன் அம்மையார் லீட் பீட்டர் போன்றோர் சில ஆவிகளுக்கு ஊடகமாக செயல்பட்டுள்ளனர்.இதை சோதித்து பார்க்க உளவியல் வல்லுனர்கள் மறுத்தாலும் இதை ஒத்துகொள்கிறார்கள்.இந்தியர்களை தவிர மற்றோர்கு இதை பற்றி சோதிக்க எந்த வழியுமில்லை.பிரம்மஞான சங்கத்தார் ஜே.கிருஷ்ணமூர்த்தியை வைத்து ஆவிகளை வரவைத்து பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்கள்.ஜே.கிருஷ்ணமூர்த்தியின் ஆரம்ப கட்ட நூல்களான 'ஆசானின் காலடியில்' "அல்சியோனின் வாழ்க்கை'ஆகிய நூல்கள் ஆவிகளின் துணைகொண்டு எழுதப்பட்டதாகும்.ஜே.கிருஷ்ண்மூர்த்தி அந்த நூல்களின் ஆசிரியர் தாமல்ல என்றே சொல்லிவிட்டார்.
ஆவிகள் தாமாக ஒருவரிடம் பிரவேசித்தால் தான் உண்டு.ஜே.கிருஷ்மூர்த்தியை வைத்து புத்தர் மாகாவீரர் கிருஷ்ணன் போன்ற உன்னத ஆவிகளை கொண்டு வந்து அவருடலில் அமரவைக்க ஆராய்ச்சியை மேற்கொண்டது பயனற்று போனது.புத்தர் தான் சாகும் தருவாயில் 2500 ஆண்டுகளுக்கு பிறகு மைத்ரேயன் என்ற பெயரில் திரும்பிவரப்போவதாக சொல்லியிருந்தார்.புத்தரின் ஆவி தற்போது தகுந்த உடலுக்காக காத்திருக்கிறது.தகுந்த கருப்பை அமைந்தவுடன் அவர் பிறப்பெடுக்க ஆரம்பித்துவிடுவார்.ஆனால் பிரம்ம ஞான சங்கத்தார் புத்தரின் ஆவியை ஜே.கிருஷ்ணமூர்த்தியின் உடலுக்குள் கொண்டுவர முயன்றார்கள்.ஆனால் ஜே.கே.அவர்கள் மறுத்துவிட்டார்.ஆரம்பகட்டத்தில் அவர் சில வற்புருத்தல்களால் சம்மதிக்க நேரிட்டது.ஆனால் அவர் முதிர்ச்சியடைந்த பிறகு தன் சொந்த வழியில் அவர் பயனிக்க ஆர்ம்பித்துவிட்டார்.
ஒவ்வொரு இடத்திலும் நூற்றுக்கணக்கான ஆவிகள் அலைந்துகொண்டுதான் இருக்கின்றன.ஒவ்வொரு மனிதனையும் இயக்குவதே மற்ற ஆவிகள் தான்.அந்தந்த மனிதனின் இயல்பிற்கேற்ப நல்ல ஆவிகளோ துஷ்ட ஆவிகளோ ஒருவனை வழிநடத்த ஆரம்பிக்கின்றன.அது ஊடகமாக செயல்பட ஒரு உடல் தேவை அவ்வளவே.அதனால் வியக்கத்தக்க காரியங்களை செய்துகாட்ட முடியும்.ஒருவனுக்கு சம்மதமில்லாமலே ஒரு கொலையை கூட ஒரு ஆவியால் செய்துவிடமுடியும்.அது நனவிலி மனதில் அமர்ந்துகொண்டு அந்த மனிதனை ஆட்டிவைக்கும்.
ஓஷோ
**********
the man and his philosophy.chapter 13-17.tamil.நீ நீயாக இரு. நாலாவது அத்தியாயம்..
#krishna_the_man_and_his_philosophy_osho.
Comments
Post a Comment