Google

மதத்தன்மை என்றால் என்ன....???_Osho

🍓 ஓஷோ கேள்வி பதில்

கேள்வி : இந்த நவீன விஞ்ஞான யுகத்துக்கு மதங்கள் தேவையில்லை,

மதத்தன்மைதான் வேண்டும் என்று கூறுகிறீர்களே...

மதத்தன்மை என்றால் என்ன....???

பதில் : " மதங்களும் , கடவுள்களும் ஒரு காலத்தில் தேவையாக இருந்தன

அறிவு குறுகி எந்தத் தொலைத்தொடர்பு வசதியும் இல்லாத காலத்தில்

மக்களிடத்தில் ஒரு பயத்தைத் தோற்றுவித்து

குற்ற உணர்வுகளைப் புகுத்தி ஆடு  மாடுகளைப் போல - ஒரு சமுதாயத்தை உண்டுபண்ண அவை தேவையாகத்தான் இருந்தது

இப்பொழுது நாம் அதே நிலையில்தானா இருக்கிறோம்....???

சுயசிந்தனை, சுயமுயற்சி,  சுயமரியாதை எல்லாம் பல மடங்கு விரிந்து பரந்து இருக்கிறது

ஆறு வயது குழந்தைகள்,  பெரியவர்களிடம்

"தைரியமாக இது ஏன்...??? எதற்கு ..??? எப்படி...?" என்று கேட்க ஆரம்பித்து விட்டார்கள்

அவர்களைப் பயமுறுத்தியோ அடக்கி வைக்கவோ இனிமேலும் முடியாது

பெரியவர்களை எதிர்த்துப் பேசாதே

அவர்கள் சொன்னதை அப்படியே நம்பு

வேதங்கள் சொன்னதை அப்படியே நம்பு

அதை ஆராய்ச்சி பண்ணாதே .....

என்று கூறி நீங்கள் எவ்வளவு நாளைக்கு

அவர்கள் மூளையை சலவை செய்வீர்கள்...???

ஆகவே , மதங்கள் என்பது மூடக்கொள்கைகள் நிறைந்த குற்ற உணர்வு மிக்க ஒரு அமைப்பு

கர்த்தா, பரலோகப்பிதா, சாத்தான்,  சொர்க்கம், நரகம் என்று எவ்வளவு நாளைக்குப் பிதற்றிக் கொண்டிருப்பீர்கள்....???

நீங்களே சிந்தியுங்கள் 

கிறிஸ்துவ போதகர்கள் எப்படி நடித்துப் பேசுகிறார்கள்

இதற்காக இவர்களுக்குத் தனிப் பயிற்சியே கொடுக்கப்படுகிறது

இதுதான் ஆன்மீகமா....???

உங்களுடைய சுயசிந்தனை எங்கே போயிற்று...???

இக்காலத்திற்கு மதத்தன்மைதான் ( Godliness ) தேவை

இதைத்தான் நான் உண்மையான  "மதம்" என்று கூறுகிறேன் 

இந்த மதம் உங்களுக்கு அன்பு, கருணை, மகிழ்ச்சி, வாழ்க்கையைப் போதிக்கிறது

இது உங்களிடம் பொய்யான கற்பனைகளையும் கனவுகளையும்,

சொர்க்கம் - நரகம் போன்ற பொய்யான நம்பிக்கைகளை எல்லாம் புகுத்தாது

இந்த வாழ்க்கை ஒரு உயிர்துடிப்புள்ள மாறுதல்

பாறை அல்ல

இங்கு புனித நூல் என்று எதுவும் கிடையாது

இந்த மதம் உங்கள் இதயத்தில் மலருவது

அது உங்கள் மைய நிலையை ( மௌனம் ) நோக்கிச் செல்லுகிறது

எப்பொழுது அது அந்த மௌனத்தைப் பூரணமாகத் தொடுகிறதோ

அப்பொழுது செயல்பட்டாலும் அதில் பூரணமாக விழிப்போடு ( Awareness) செயல்படுகிறீர்கள்

இதைத் தவிர வேறு உண்மையான மதம் - அதாவது மதத்தன்மை எதுவும் இல்லை

இதில் நிகழ்காலம் மட்டுமே உண்டு

அதாவது இப்பொழுது கணத்துக்குக்கணம் வாழ்தல் ( Here and Now )

ஆனால்

இந்த மதத்தன்மையை அடைய நாம் சிறிது பாடுபடவேண்டும் 

என்னுடைய "நான் போதிப்பது மதத்தன்மையைத்தான்,

மதத்தை அல்ல" என்ற புத்தகத்தைப் படிக்கவும்  🍓

🍒 ஒஷோ 🍒

Comments