பெரும்பாலானவர் மற்றவராகவே இருந்து வருகின்றார்கள். - Osho
பெரும்பாலானவர் மற்றவராகவே இருந்து வருகின்றார்கள்.
அவர்கள் அவர்களுக்காக வாழ்வதே இல்லை.
நடிப்பதற்கான பாத்திரங்களை மற்றவர்களே அவர்களுக்கு தருகின்றார்கள்.
அவர்களுடைய சிந்தனைகள் மற்றவர்களின் அபிப்பிராயங்களே.
அவர்களுடைய முகங்கள் வெறும் முகமுடிகளே.
அவர்கள் முகமற்றவர்கள்.
வாழ்வதற்கான ஆதாரமற்றவர்கள்அவர்கள்.
அவர்களது வாழ்வு வெறும் விகடம்.
அவர்களது உணர்வுகள் வெறும் மேற்கோள்கள்.
இந்த தீய வட்டத்தை உடைத்து விடு.
இல்லாவிட்டால் உனக்கு இருப்பே இல்லை.
தியானத்தால் இதை உடை.
வேறு எதனாலும் இதை உடைக்க முடியாது.
தியானம் தவிர மற்றெல்லாம் மனமே.
மனம் ஓரு சிறை.
தியானம் ஓரு கதவு.
ஓரே கதவு.
புலன்களால் வெளியே தேடுதல் நிறுத்தும் வரையில் உனக்குள் உள்ளே அறியாத வரையில் தன்னை உணரும் ஆன்மீக பாதையில் ஓர் அடி முன் வைக்க முடியாது.
- ஓஷோ
Comments
Post a Comment