Google

பிரார்த்தனை பற்றி...


 பிரார்த்தனை பற்றி...                                

வேதனை கொண்டு எந்தக் கடவுள் களிடம் நீங்கள் முறையிட்டாலும், அது உங்களையே நீங்கள் வேண்டிக் கொள்வதாகவே அமைகிறது. ஈர்க்கும் ஆற்றலும், விலக்கும் ஆற்றலும் உங்களுக்குள்ளேயே இருக்கின்றன. பூட்டும், சாவியும் முதலிலே உங்களிடம் கொடுக்க பட்டுள்ளது. அதே போல் வாழ்வும், வாழ வழியும் படைப்பிலே கொடுக்க பட்டுள்ளது. உங்கள் வேலையை நீங்கள் செய்யுங்கள். கடவுளை விட்டு விடுங்கள். உங்கள் நினைவில் குவிந்துள்ள குப்பையை அகற்றுங்கள் வழி கிடைக்கும். 

இறைவன், உன்னை படைப்பின் வெளிப்படுத்தும் போது அவன், உன்னில் தன்னையே வெளிப்படுத்திக் கொள்கிறான். ஆனால் நீங்கள் கடவுளை உங்கள் கவலையின் புதை குழியாகவும், செல்வங்களும் கருவூலமாகக் கருதுகிறீர்கள். கதிரவனின் உதயம், மறைவு நேரங்களை நீங்கள் கடவுளுக்கு நினைவூட்டுகிறீர்களா? என்ன? இல்லை நினைவூட்ட வேண்டுமா? உங்களது அற்பத்  தேவைகளுக்காக,உங்கள் பலவீனமான சுயத்தை அவர் மீது ஏன் சுமத்துகிறீர்கள்?  தமது இதயத்தில் ஒரு கோயிலைக் காணாதவர் எந்த கோயிலிலும் தமது இதயத்தைக் காண முடியாது. 

கடவுளின் இறைதன்மையே விதை. அது உங்களிடத்தில் தான் உள்ளது. நீங்கள் கண்டு கொள்வதற்காக, பராமரிப்பதற்காக, அவர் தமது இறைத்தன்மையின் விதையை உங்களிடம் தந்திருக்கும் போது அதை நீங்கள் தான் மரமாக்கி மலர வைக்க வேண்டும். 

மிர்தாத்.

Comments