Google

உண்மை அதற்கு நிருபணம் தேவையில்லை


 உண்மை என்பது அனைவராலும் ஒப்புக் கொள்ளப்படும் வெளிப்படை உண்மை. அதற்கு நிருபணம் தேவையில்லை. வாதங்களால் வெளிப்படுவன  எவையாக இருந்தாலும், அவை பிற்காலத்தில் அதே விதமாக வாதமாக வந்து, கதவு தட்டும், நிரூபணம் கேட்கும். ஒன்றை நிரூபித்தால், அதற்கு நேர் எதிரானதை தவறானதென நிரூபிப்பதாகி விடும். அந்த எதிரான அம்சத்தை நிரூபிப்பது, இதைத் தவறென நிரூபிப்பது ஆகி விடும். 

கடவுளுக்கு எதிர் அம்சம் இல்லை. அதனால், அவரைத் தவறெனவோ, சரியெனவோ  எவ்வாறு நிரூபிக்க முடியும்?  உண்மைக்கு வாய்க்கால்கள் இருக்க வேண்டுமானால், நமது நாக்கு, ஒரு கதிரடிக்கும்  கம்பாகவோ, நச்சுப்பல்லாகவோ, பருவநிலை காட்டும் கருவியாகவே, கழைக்  கூத்தாடியாகவோ, தோட்டியாகவோ இருக்க கூடாது.  மெளனத்தின்.  சிரமத்தைக் குறைக்க மட்டும் பேசு. பேச்சற்று  இருப்பது உங்களை விடுவிக்க. ஒரு வீட்டிக்கு விளக்குமாறு எப்படியோ அப்படித்தான் சுயதேடல், இதயத்திற்கு அதனால், உமது இதயங்களை நன்றாகக் கூட்டிப் பெருக்குங்கள். நன்றாகப் பெருக்கிக் தூய்மைப் படுத்தப்பட்ட இதயம் முற்றுகைத்  தாங்கமுடியாத கோட்டையாகும்.


 நீங்கள் எவ்வாறு மக்களையும், மற்றவற்றையும் ஊட்டி வளர்க்கிறீர்களோ, அவ்வாறே அவை உம்மை ஊட்டி வளர்க்கும். உங்களுக்கு நஞ்சூட்டப்படக்கூடாது என்றால், நீங்கள், மற்றவர்களுக்கு முழு உணவாகிவிடுங்கள். அடுத்த காலடி வைப்பில் சந்தேகம் தோன்றினால், அப்படியே அசையாமல் நின்று விடுங்கள். நீங்கள் எதை வெறுக்கிறீர்களோ, அது உங்களை வெறுக்கும். ஒன்றை விரும்பி, அதை அப்படியே உள்ள படி விட்டு விட்டால், உமது பாதையில் தடைகள் ஏற்பட வழியில்லை.

 எதையும் ஒரு தொல்லையாக நினைப்பது தான், மிகவும் தாங்க முடியாத தொல்லை. எல்லாவற்றையும்  பெறுதல், அல்லது  எல்லாவற்றையும் துறத்தல், இந்த இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இதில் நடுவழி என்பதே இல்லை. தடுமாறச் செய்யும் ஒவ்வொரு தடைக் கல்லும் ஓர் எச்சரிக்கை. எச்சரிக்கையை நன்றாகக் கவனியுங்கள். அவ்வாறு கவனித்துக் கற்றால், அந்தத் தடைக்கல்லே  ஒரு வழிகாட்டி ஆகிவிடும்.

 மிர்தாத்

Comments