Google

யார் எஜமானர்? நீங்களா? மனமா? - OSHO



யார் எஜமானர்?
நீங்களா? மனமா?
ஒரு அலசல் by
ஓஷோ,,,,,

உங்கள் நிழல் உங்களைப் பின்பற்றி வருவது போல நீங்கள் மனதைப் பின்தொடர்ந்து சென்றவண்ணம் இருக்கிறீர்கள்.

நீங்கள் ஒரு எஜமானர் என்பதை மறந்து விட்டீர்கள்.

அடிமைகளுடன் தொடர்ந்து கலந்து பணியாற்றியதால் மெல்ல மெல்ல அவர்களையே எஜமானர்களாகக் கருதத் துவங்கிவிட்டீர்கள்.

அவர்களை அதிகம் சார்ந்திருக்கும் போது அவர்களின் எஜமானத்துவம் ஊர்ஜிதப்பட்டு விடுகிறது.

மனம் உங்களுக்கு எஜமானனாக இருப்பதை அழிப்பதே அனைத்து ஆன்மீகத் தேடல்களின் குறிக்கோளாக இருந்து வருகிறது.

மனதின் எஜமானத்துவத்தை அழிக்க என்ன செய்ய வேண்டும்? அதனுடன் உங்களை அடையாளப்படுதுவதை முதலில் நிறுத்த வேண்டும்.

இது என்னுடைய எண்ணம்" என்று உரிமை கொண்டாடாதீர்கள்.என்னுடையது என்று சொல்லும் தருணத்தில் நீங்கள் அதனுடன் இணைந்து போய்விடுகிறீர்கள்.

உங்கள் சக்தி எல்லாம் அந்த எண்ணத்திற்குக் கைமாறி விடுகிறது.அந்த சக்தி உங்களை எண்ணங்களுக்கு அடிமைப்படுத்தி விடுகிறது.

உங்கள் சக்தியே உங்கள் அடிமைத்தனத்துக்கு வழியமைத்து விடுகிறது.

எண்ணங்களுடன் பந்தப்பட்டு போகாதீர்கள். நீங்கள் அவற்றிலிருந்து விலகி நிற்கும்போது அவை உயிரற்று பலமிழந்து போய்விடுகின்றன. அவற்றுக்குச் சக்தி கிடைப்பதில்லை.

விளக்கின் சுடரை அனைத்துவிட ஆசைப்படுகிறீர்கள்.ஆனால் அதற்குப் பதில் விளக்குக்கு மேலும் எண்ணெய்  வார்க்கிறீர்கள். அதுதான் பிரச்சினை.

ஒரு கையால் விளக்கின் சுடரை அனைக்க முயன்று கொண்டே மறுகையால் விளக்கிற்கு எண்ணெய் ஊற்றவும் செய்கிறீர்கள்.

முதலில் எண்ணெய் ஊற்றுவதை நிறுத்துங்கள். விளக்கில் மீதமிருக்கும் எண்ணெய் விரைவில் தீர்ந்து விடும். பிறகு விளக்கு தானே அணைந்து போய்விடும்.

விளக்கிற்கு எது எண்ணெயாக இருக்கிறது?

ஏதாவது ஒரு எண்ணம் உங்களை ஆக்கிரமிக்கும் போது நீங்கள் அதனுடன் கலந்து விடுகிறீர்கள்.

ஓஷோ,,,,,

Comments