Google

பாலுணர்வு குற்றம் என்றால்... கடவுள்தான் முதல் குற்றவாளி...- OSHO



அன்பு...
பாலுணர்வு.

பாலுணர்வு குற்றம் என்றால்...
கடவுள்தான் முதல் குற்றவாளி...

உயிர்களின் பிறப்பிற்கு "மூலமாக" ....
பாலுணர்வை வைத்தது அவன்தான்...

சிவனுக்கு அன்பு மிகப்பெரிய வாயில்...

சிவனுக்கு காமம் என்பது கண்டிக்கத்தக்கதல்ல...

அவருக்கு காமம் என்பது விதை...
அன்பு என்பது மலர்...

ஆகவே விதையை கண்டித்தால்...
மலரையும் கண்டிப்பவனாகிறாய்...

காமம் அன்பாக மாறமுடியும்...

அப்படி மாறாவிட்டால்...
அது முடமாக்கப்பட்டுகிறது...

ஆகவே...

 "முடமாக்கப்படுவதை" கண்டியுங்கள்...

காமத்தை அல்ல...
அன்பு மலர வேண்டும்...

காமம் அன்பாக மாற வேண்டும்...

அப்படி அது மாறவில்லையென்றால்...
அது காமத்தின் குற்றமல்ல...

உன்னுடைய குற்றம்...

காமம் காமத்தோடு நின்றுவிடக்கூடாது...

இதுவே தந்த்ரா சொல்வது...
அது அன்பாக மாற்றப்பட வேண்டும்...

அன்பும் அன்பாக நின்றுவிடக் கூடாது...

அதுவும் ஒளியாக...

தியான அனுபவமாக...

முடிவான நிலையாக...

ஞானத்தின் சிகரமாக மாற்றப்பட வேண்டும்...

அன்பை எப்படி மாற்றுவது?

செய்பவனை மறந்து...
செயலாக மாறு...

அன்பில் ஈடுபடும்போது...
அன்பாகவே இரு...

வெறும் அன்பாக மட்டும்.

அப்போது அது...

 உன்னுடைய அன்பல்ல...
என்னுடைய அன்போ...
மற்றவரின் அன்போ அல்ல...

அது வெறும் அன்பு.

"நீ" அங்கு இல்லாதபோது...

நீ அந்த "மூலசக்தியின்" கைகளில் இருக்கும்போது...

அந்த நிலையில்...
நீ அன்பாய் இருக்கிறாய் என்பதில்லை...

அன்பு உன்னுள் நிரம்பி...
உன்னை மூழ்கடித்துவிட்ட நிலையில்...

"நீ" மறைந்து விடுகிறாய்.

"நீ" சக்தி பிரவாகமாகவே மாறிவிடுகிறாய்.

இதை ஆழ்ந்து புரிந்துகொள்ளுங்கள்...

~~ ஓஷோ ~~

விஞ்ஞான் பைரவ் தந்த்ரா.

Comments